என் மேசையில் ஓர் எறும்பு
அனல் தகித்தது;
தொண்டை தவித்தது;
சுற்றிய புத்தகங்களுள்ளால்
தலை எட்டிப்பிடித்துத் தூக்கினேன்
பையிட்ட குளிர்ப்பசும்பால்.
வேகுவெயில் ஒரு புறம்;
மண்டை விறைப்புக்கு
வேண்டாத விஞ்ஞான
ஆய்வுக்கட்டுரை மறுபுறம்.
கவைக்குதவாக் கல்விதான்;
ஆனாலும், கைதொட்டது
கட்டி(ற்று) முடிக்கவேண்டிய
கழுத்துக்கயிற்று வலுக்கட்டாயம்.
எட்டுநாளாய் ஒரு பக்கம்தன்னும்
என் எழுத்தில் எட்டிக்காலடி
வைப்பதில்லை என்பதாய்
முட்டாள் மூளைக்கு முனைப்பென்றால்,
மசிப்பேனாக்கு முன்மூக்கு முனை விட்டுப்போகும்,
அல்ல(து) இரு கண் இமைக்கு, காத்தடிக்க,
கதவு மூடக்-காதல் வரும்; கனவு வரும் நித்திரையில்,
குப்பை அள்ளிக் கொட்டாத்தெரியாதவன்
கோபுரக்கலசத்திலே குளிர்கங்கையூற்றிக்
கோயிற் கும்பாபிஷேகம் செய்திருக்க.
வெட்கமில்லாமல்,
எத்தனைநாள் என்னோடு
எனக்கே இத்தனை மதயானை மல்யுத்தம்?
அ
த்
த
னையுள்,
சற்றுக் கைபிசகி
கொட்டிப்போச்சு,
சிறு முத்துப் பொட்டணிபோல்
முன் மேசையிலே, ஆவின் பால் .
எட்டித் துடைக்கவும்
சக்தியில்லை என்பதுபோல்
விட்டுவிட்டு மிச்சதெல்லாம்
முட்டக்குடித்து முழுதாய்
விட்டேன் ஒரு ஏப்பம்.
முடிந்தது கதை; கண்ணுள்
வட்ட நித்திரை நிலா ஒரு வண்ணச்
சுவர்ச்சித்திரமாய்ச் சொக்கிப்போட்டது.
எத்தனை நேரம் சித்தம் மயங்கிச்
சரிந்திருந்தேன் அறிந்தேனில்லை.
எழுகையிலே, சிறு இரவு முகில்
கவிந்திருக்க, செயலற்றுச் சில மணி
நேரம் சிதறிப் போயிருத்தல், மழைக்காலச்
சிறுகுருவி சிறகடிக்கும் அச்சம்நிறை அவதி
உணர்வெழும்பும் அடிமனதுள்ளே.
மூளையுடன் மோதி
மீளவும் முனைவேன்
முன்னேறா என் வேலை.
என் முன்னே, கரை ஓரம் காய்ந்த
பாற்குட்டையுள்ளே தத்தளிக்கும்
ஒரு கட்டெறும்பு. கைவிட்டுத்
தூக்கிவிட கணச் சலனம் கொள்ளும்
துக்கித்த மனது. பின், ஒரு நொடியில்
கொள்நிலை தடம் மாறும்;
கட்டெறும்பு,
சிந்திய பால் தன் சிறு
தொந்தி உண்டியாய் நிரப்ப
உந்தியால் வந்த வினை.
தண்டனை வேண்டாமோ, தன்
தலையிலே தானே மண்ணைக்
கிண்டிக்கிண்டிப் போட்டதற்கு?
கை விலக்கி உன்னித்துப் பார்க்கும்
கண்; கவனமும் கடிவாளம் போட்டுக்
கண்படாம் கட்டியதால்
பந்தயக்கோட்டுக்குள் மட்டும் பக்குவாய்ப்
பாய்ந்தோடும்; சிந்தனை சிதறாது,
எறும்பின் செயல்மட்டுமே என் சிந்தை.
எறும்புக்கு என்னைத் தெரியாது
என்றே நீங்கள் கொள்ளவேண்டும்.
முந்தியும் பால், மேசைதனில்
பல வேளை பகல்வேளை சிந்தியதால்
எண்ணிலா எறும்பு, என் இன்ப நித்திரையில்
முன்னே முகத்தில்
முழு வீரியமாய்க் கடித்தெழுப்பி,
மூக்கின் மேட்டுப்பூமியிலே
மோவாயின் மிக அருகினிலே,
ஒன்று இன்னும் போக்குக் காட்டி
நித்திரை பூத்துத் திறந்த உதட்டிடையே
வெளித்தூங்கு நாக்கின் நுனியிற்கூட
நயவஞ்சகமாய் நன்னிவைத்து,
குறிஞ்சிக் காத்தற்கடவுள்,
கந்தன் குடியிருப்புக் கணக்கில் ஒரு வீங்கு
குன்றெழுப்பிப் போனதனால்,
இந்த எறும்பும் இருக்கும்
இருக்கலாம் அந்தத் துணிவு.
ஆனாலும் அதற்கு என்னை
முன்னை தெரியாது; என் முக
வரி, வலி அறியாது, எனக்கு
அதன் ஊசிமுனை ஈட்டியைப் போல்.
குனிந்து கிட்டக் குந்தியிருந்து பார்க்க,
எறும்பு, மிக அலைகொண்ட கடற்
புயலில் வந்த ஒரு
நெஞ்சுரப்பயணியென
நம்பிக்-கையில் கால் வலிக்கும்,
மேசைக் கரை தானடைய.
என் சிந்தையில் சட்டென்று
ஒரு சின்னப்பொறி;
எந்தனது எட்டு நாள்,
ஓர் எறும்புக்கு எத்தனை
பாகமதன் வாழ்பரப்பில்?
இந்தத் திரவத்தே திசைதேடித்
தட்டுத்தடுமாறும் காலம்கூட
கிட்டத்தட்ட எனக்கு எட்டுநாளிலும்விட
அதற்கு எத்தனையோ மேலாயிருக்கும்,
இப்பூமி வாழ்கணக்கில் .
உயிர் சிக்கித்துடிக்கையிலும்
விட்டுவிடாது கரை எட்டத்துடிக்கும்
சின்ன கட்டெறும்பு மேலெனக்குக்
கண்ணியம் வந்தது;
கனவானாய்த் தெரிந்தது; கூடவே,
அவையூடு என் எட்டுநாள் முழு நித்திரையிற்
கடத்திய முழு முட்டாற்றனம் தெரிந்தது; ஒரு
குட்டிப் பொறாமையும் குத்திப் பிறந்தது.
சற்றுப் பொழுதிலே எறும்பு
பாற்குட்டை கடந்தது; கரை
அதற்குப் பிறந்தது; தலை
தூக்கி என்னை ஒரு தடவை
உற்றுப் பார்த்தது;
குளமிருந்து கைதூக்கி விட்டுக்கிடவாதற்கு
"எப்படி பார், என் எட்டுக் குட்டைக்கால்களினால்
நானே எட்டிக் கடந்தேன்" என்ற
கம்பீரம் சொட்டும் கண் பார்வையா, இல்லை,
"நன்றி; நான் சிக்கற் படுகையிலே, அந்நியக்கை
தூக்கிச் சொந்தக் கால் நிற்கவிட்டாமல், எதிராய் நீந்தவிட்டு
நேர் வழி சொன்ன முற்போக்கான மனிதா; நீ வாழி" என்ற
நன்றி வழிந்தோடும் நயமான நிலைப்பா?
நான் அறியேன்.
வாமன எறும்பு,
என் படிப்பு மேசையிலே,
பால்வீதி ஒன்று,
ஒற்றைகீற்றாய் உருவாக்கி
நீண்டு சுவர் ஓரத்தே
தன் உருவம் மறையும்.
அந்தப்பாதை நோக்கி,
பயத்துடன் விக்கித்து நிற்பேன்
நான்,
பொழுதெனக்கு
விடிதல் வரை.
-98 ஆனி 28, ஞாயிறு 13: 55
தொண்டை தவித்தது;
சுற்றிய புத்தகங்களுள்ளால்
தலை எட்டிப்பிடித்துத் தூக்கினேன்
பையிட்ட குளிர்ப்பசும்பால்.
வேகுவெயில் ஒரு புறம்;
மண்டை விறைப்புக்கு
வேண்டாத விஞ்ஞான
ஆய்வுக்கட்டுரை மறுபுறம்.
கவைக்குதவாக் கல்விதான்;
ஆனாலும், கைதொட்டது
கட்டி(ற்று) முடிக்கவேண்டிய
கழுத்துக்கயிற்று வலுக்கட்டாயம்.
எட்டுநாளாய் ஒரு பக்கம்தன்னும்
என் எழுத்தில் எட்டிக்காலடி
வைப்பதில்லை என்பதாய்
முட்டாள் மூளைக்கு முனைப்பென்றால்,
மசிப்பேனாக்கு முன்மூக்கு முனை விட்டுப்போகும்,
அல்ல(து) இரு கண் இமைக்கு, காத்தடிக்க,
கதவு மூடக்-காதல் வரும்; கனவு வரும் நித்திரையில்,
குப்பை அள்ளிக் கொட்டாத்தெரியாதவன்
கோபுரக்கலசத்திலே குளிர்கங்கையூற்றிக்
கோயிற் கும்பாபிஷேகம் செய்திருக்க.
வெட்கமில்லாமல்,
எத்தனைநாள் என்னோடு
எனக்கே இத்தனை மதயானை மல்யுத்தம்?
அ
த்
த
னையுள்,
சற்றுக் கைபிசகி
கொட்டிப்போச்சு,
சிறு முத்துப் பொட்டணிபோல்
முன் மேசையிலே, ஆவின் பால் .
எட்டித் துடைக்கவும்
சக்தியில்லை என்பதுபோல்
விட்டுவிட்டு மிச்சதெல்லாம்
முட்டக்குடித்து முழுதாய்
விட்டேன் ஒரு ஏப்பம்.
முடிந்தது கதை; கண்ணுள்
வட்ட நித்திரை நிலா ஒரு வண்ணச்
சுவர்ச்சித்திரமாய்ச் சொக்கிப்போட்டது.
எத்தனை நேரம் சித்தம் மயங்கிச்
சரிந்திருந்தேன் அறிந்தேனில்லை.
எழுகையிலே, சிறு இரவு முகில்
கவிந்திருக்க, செயலற்றுச் சில மணி
நேரம் சிதறிப் போயிருத்தல், மழைக்காலச்
சிறுகுருவி சிறகடிக்கும் அச்சம்நிறை அவதி
உணர்வெழும்பும் அடிமனதுள்ளே.
மூளையுடன் மோதி
மீளவும் முனைவேன்
முன்னேறா என் வேலை.
என் முன்னே, கரை ஓரம் காய்ந்த
பாற்குட்டையுள்ளே தத்தளிக்கும்
ஒரு கட்டெறும்பு. கைவிட்டுத்
தூக்கிவிட கணச் சலனம் கொள்ளும்
துக்கித்த மனது. பின், ஒரு நொடியில்
கொள்நிலை தடம் மாறும்;
கட்டெறும்பு,
சிந்திய பால் தன் சிறு
தொந்தி உண்டியாய் நிரப்ப
உந்தியால் வந்த வினை.
தண்டனை வேண்டாமோ, தன்
தலையிலே தானே மண்ணைக்
கிண்டிக்கிண்டிப் போட்டதற்கு?
கை விலக்கி உன்னித்துப் பார்க்கும்
கண்; கவனமும் கடிவாளம் போட்டுக்
கண்படாம் கட்டியதால்
பந்தயக்கோட்டுக்குள் மட்டும் பக்குவாய்ப்
பாய்ந்தோடும்; சிந்தனை சிதறாது,
எறும்பின் செயல்மட்டுமே என் சிந்தை.
எறும்புக்கு என்னைத் தெரியாது
என்றே நீங்கள் கொள்ளவேண்டும்.
முந்தியும் பால், மேசைதனில்
பல வேளை பகல்வேளை சிந்தியதால்
எண்ணிலா எறும்பு, என் இன்ப நித்திரையில்
முன்னே முகத்தில்
முழு வீரியமாய்க் கடித்தெழுப்பி,
மூக்கின் மேட்டுப்பூமியிலே
மோவாயின் மிக அருகினிலே,
ஒன்று இன்னும் போக்குக் காட்டி
நித்திரை பூத்துத் திறந்த உதட்டிடையே
வெளித்தூங்கு நாக்கின் நுனியிற்கூட
நயவஞ்சகமாய் நன்னிவைத்து,
குறிஞ்சிக் காத்தற்கடவுள்,
கந்தன் குடியிருப்புக் கணக்கில் ஒரு வீங்கு
குன்றெழுப்பிப் போனதனால்,
இந்த எறும்பும் இருக்கும்
இருக்கலாம் அந்தத் துணிவு.
ஆனாலும் அதற்கு என்னை
முன்னை தெரியாது; என் முக
வரி, வலி அறியாது, எனக்கு
அதன் ஊசிமுனை ஈட்டியைப் போல்.
குனிந்து கிட்டக் குந்தியிருந்து பார்க்க,
எறும்பு, மிக அலைகொண்ட கடற்
புயலில் வந்த ஒரு
நெஞ்சுரப்பயணியென
நம்பிக்-கையில் கால் வலிக்கும்,
மேசைக் கரை தானடைய.
என் சிந்தையில் சட்டென்று
ஒரு சின்னப்பொறி;
எந்தனது எட்டு நாள்,
ஓர் எறும்புக்கு எத்தனை
பாகமதன் வாழ்பரப்பில்?
இந்தத் திரவத்தே திசைதேடித்
தட்டுத்தடுமாறும் காலம்கூட
கிட்டத்தட்ட எனக்கு எட்டுநாளிலும்விட
அதற்கு எத்தனையோ மேலாயிருக்கும்,
இப்பூமி வாழ்கணக்கில் .
உயிர் சிக்கித்துடிக்கையிலும்
விட்டுவிடாது கரை எட்டத்துடிக்கும்
சின்ன கட்டெறும்பு மேலெனக்குக்
கண்ணியம் வந்தது;
கனவானாய்த் தெரிந்தது; கூடவே,
அவையூடு என் எட்டுநாள் முழு நித்திரையிற்
கடத்திய முழு முட்டாற்றனம் தெரிந்தது; ஒரு
குட்டிப் பொறாமையும் குத்திப் பிறந்தது.
சற்றுப் பொழுதிலே எறும்பு
பாற்குட்டை கடந்தது; கரை
அதற்குப் பிறந்தது; தலை
தூக்கி என்னை ஒரு தடவை
உற்றுப் பார்த்தது;
குளமிருந்து கைதூக்கி விட்டுக்கிடவாதற்கு
"எப்படி பார், என் எட்டுக் குட்டைக்கால்களினால்
நானே எட்டிக் கடந்தேன்" என்ற
கம்பீரம் சொட்டும் கண் பார்வையா, இல்லை,
"நன்றி; நான் சிக்கற் படுகையிலே, அந்நியக்கை
தூக்கிச் சொந்தக் கால் நிற்கவிட்டாமல், எதிராய் நீந்தவிட்டு
நேர் வழி சொன்ன முற்போக்கான மனிதா; நீ வாழி" என்ற
நன்றி வழிந்தோடும் நயமான நிலைப்பா?
நான் அறியேன்.
வாமன எறும்பு,
என் படிப்பு மேசையிலே,
பால்வீதி ஒன்று,
ஒற்றைகீற்றாய் உருவாக்கி
நீண்டு சுவர் ஓரத்தே
தன் உருவம் மறையும்.
அந்தப்பாதை நோக்கி,
பயத்துடன் விக்கித்து நிற்பேன்
நான்,
பொழுதெனக்கு
விடிதல் வரை.
-98 ஆனி 28, ஞாயிறு 13: 55
0பினà¯à®©à¯à®à¯à®à¯:
Post a Comment
<< Home