என்னால் நேசிக்கப்படுபவர்களுக்கு...
எனது நேசிப்புக்கள்
என் எழுத்துக்களைப்போலவே
வெளிப்பார்வைக்கு
வெறும்
முரண் தொகைப்பட்டிருக்கிறன;
கூடவே தெளிவின்றிக்
குழப்பம் கொண்டனவாயும்...
தூரத்தில் நான் வைப்பவர்கள்
ஒருபோதும் என்னைத்
தூற்றியது கிடையாது;
என்னுள்ளே தங்கள் தூரத்தை
எண்ணிமட்டும் துவண்டு
குழம்பிப்போகிறார்கள்.
அவர்களிடம் என் நேரழுத்தப்பண்புகளின்
நியாயநிலுவை காட்டப்படுகிறன.
ஆனாலும், வரைகோட்டுக்குமேல்
வட்டத்துள் அவர்களை
வரவிட்டதில்லை
அருகிலே நான்.
என்னால் நேசிக்கப்படுபவர்கள்
என்றும் என் ஆத்திரத்தையும்
அனலையும் அம்புகளையும் மட்டுமே
ஏந்திக்கொள்கிறார்கள்;
எமது சந்திப்புக்களங்களை
நான் குருச்சேத்திரம்
ஆக்கிவிடுவதாகவும்
குற்றச்சாட்டுக்கள்.
எனக்குப் புரிகிறது,
இங்கு இன்று மனிதனென்று
நான் ஒருவன் மட்டுமே
நிலத்தில் விட்டு
வைக்கப்பட்டிருக்கிறேன்
என்ற வெட்கக்கேட்டை.
மீதியில் பாதி
வேட்டைக்கோரைப்பல் மிருகமானார்கள்;
மிகுந்தவர்
பூமி கால் பாவா தேவரானார்கள்.
நான் ஒருவன் மட்டுமே
நலிந்து
மனிதன் என்று வாழ்ந்திருப்பேன்.
ஆதலினால்,
எனக்குள் நிறைந்து
நேர்களும் மறைகளும்
சமச்சீராய்ப் பரவிக்கிடக்கும்.
என் துயரங்களை, துன்பங்களை
பொறி பரப்பு வெம்மனமூட்டல்களை
என் நேசத்துக்குரியவர்களிடமே
வேஷம் கட்டாமல் பொசியவிடுகிறேன்,
என் அக மின் ஏற்றம் அகற்றலுக்கு.
என் தூரத்து அன்பர்களிடம்
செயற்கை வகைப்பயிர்ச்செய்கையில்
நற்பண்பு செழிக்கிறது,
அன்பின் அறுவடைக்கு.
இத்தனையால்,
நிஜமாகிப்போனதெல்லாம்,
நான் நிரம்பவே
நேசித்து முடியாதவரெல்லாம்
என்றும் என்னை
நிழலில்லா நேர்மையுடன்
நேசிக்க முடிவதில்லை.
-98 ஆனி 28, ஞாயிறு 20:43
என் எழுத்துக்களைப்போலவே
வெளிப்பார்வைக்கு
வெறும்
முரண் தொகைப்பட்டிருக்கிறன;
கூடவே தெளிவின்றிக்
குழப்பம் கொண்டனவாயும்...
தூரத்தில் நான் வைப்பவர்கள்
ஒருபோதும் என்னைத்
தூற்றியது கிடையாது;
என்னுள்ளே தங்கள் தூரத்தை
எண்ணிமட்டும் துவண்டு
குழம்பிப்போகிறார்கள்.
அவர்களிடம் என் நேரழுத்தப்பண்புகளின்
நியாயநிலுவை காட்டப்படுகிறன.
ஆனாலும், வரைகோட்டுக்குமேல்
வட்டத்துள் அவர்களை
வரவிட்டதில்லை
அருகிலே நான்.
என்னால் நேசிக்கப்படுபவர்கள்
என்றும் என் ஆத்திரத்தையும்
அனலையும் அம்புகளையும் மட்டுமே
ஏந்திக்கொள்கிறார்கள்;
எமது சந்திப்புக்களங்களை
நான் குருச்சேத்திரம்
ஆக்கிவிடுவதாகவும்
குற்றச்சாட்டுக்கள்.
எனக்குப் புரிகிறது,
இங்கு இன்று மனிதனென்று
நான் ஒருவன் மட்டுமே
நிலத்தில் விட்டு
வைக்கப்பட்டிருக்கிறேன்
என்ற வெட்கக்கேட்டை.
மீதியில் பாதி
வேட்டைக்கோரைப்பல் மிருகமானார்கள்;
மிகுந்தவர்
பூமி கால் பாவா தேவரானார்கள்.
நான் ஒருவன் மட்டுமே
நலிந்து
மனிதன் என்று வாழ்ந்திருப்பேன்.
ஆதலினால்,
எனக்குள் நிறைந்து
நேர்களும் மறைகளும்
சமச்சீராய்ப் பரவிக்கிடக்கும்.
என் துயரங்களை, துன்பங்களை
பொறி பரப்பு வெம்மனமூட்டல்களை
என் நேசத்துக்குரியவர்களிடமே
வேஷம் கட்டாமல் பொசியவிடுகிறேன்,
என் அக மின் ஏற்றம் அகற்றலுக்கு.
என் தூரத்து அன்பர்களிடம்
செயற்கை வகைப்பயிர்ச்செய்கையில்
நற்பண்பு செழிக்கிறது,
அன்பின் அறுவடைக்கு.
இத்தனையால்,
நிஜமாகிப்போனதெல்லாம்,
நான் நிரம்பவே
நேசித்து முடியாதவரெல்லாம்
என்றும் என்னை
நிழலில்லா நேர்மையுடன்
நேசிக்க முடிவதில்லை.
-98 ஆனி 28, ஞாயிறு 20:43
0பினà¯à®©à¯à®à¯à®à¯:
Post a Comment
<< Home