கி பி 2210
நித்திரைக்குப் போகக்கூடப் பயமாக இருக்கிறது;
கனவெல்லாம் கூட மரங்கள் கறுப்புக் கறுப்பாகத் திட்டிட்டு;
மேகங்கள் மின்னலைக்கூடப் பொத்திவைக்கும் பெரும்புகையாம்;
பொய்யென்றேன்;
கண்டுபிடித்துப்பார் முன்னர் உன் கண்பறி என்று கறாராய் சொல்லின
பஞ்சு மனம் செத்த கருமை படிமுகில்கள்.
நதிகள் குருதி கொண்டு குதித்தோட,
காளவாய் திறந்து புதிதாய்க் கூர்ப்படைந்த புது விலங்குகள்
மனித மூளைக்கூளம் கூட்டித்தின்று குதூகலித்து நின்றன
கண்களின் ஆனந்தக்குருதி நதிக்குருதி நனைத்தோட.
ஆலைப் புகைபோக்கிகள் தொலை ஏவு துப்பாக்கிக் கொடூரம் கொண்டு
துழைத்துத் தள்ளின வான்வெளியை
முகிலுக்கு கொடுங்கருமூலதனம் இட்டிருக்கும் ஆவல் கொண்டு.
என் உடல் நிறமாறிப் போயிருக்கும்,
சூரிய நிறமாலை மறந்து போயிருக்க என் நிலையை.
சூரியனை என் தந்தை பார்த்ததாய்ச் சொல்லியிருந்தார் புத்தகங்களில்.
கனத்துத் தூங்கும் அங்கங்கள் முதலைமுதுகாயும் பிஞ்சிட்ட பலாவாயும்
பெருஞ்சுமையாய்.
மகள் மகன் என்றும் மகன் மகளேயென்றும் அடையாளம் அற்று
உடல் பிதுங்கித் தள்ளியிருப்பர் பேயாய் பூதங்களாய்.
மனைவி, செத்துப் பலமாதம்,
ஆண்டுக்கு முந்தைய அமில மழை நனைவிலா, ஆலைப்புகை அவிச்சலிலா?
மறந்துபோயிற்று; சிந்தனையும் செத்து வருகிறது,
ஒன்றுக்கும் உடல் ஒன்றும் கேட்காமற் போகும்படி ஆள்கைப் பலம்
அறுந்து.
நேற்றும் சில மூளைப்பகுதி மூக்கால் உருகிப்போனது மஞ்சளாய்
இரத்தத்துளிகளுடன் சின்ன வயதொன்றில் அறுத்துப்போட்ட ஆட்டுக்
குடல்போல;
சிந்தைப்புறமா, இல்லை ஞாபகத்தளமா இந்தமஞ்சள்?
கேட்டுந்தான் என்ன? ஆயினும், கேட்கவும் வைத்தியர் இல்லை.
போன புதுப் பக்ரீயப் பரவலிற்றான் என் இரண்டாம் மகளுடன்
ஒன்றாய்ப் புதைத்தோம் நானும் என் மற்றைய பிள்ளைகளும்
அவர் புத்திரர்கள் கைகள் வைரஸ¤த்தின்னலில் அழுகிவிழுந்துபோனதால்.
காணும் தொலைவெல்லாம் மரங்கள் துளை விழுந்து இலை இழந்து
கிடந்திருக்கும் பெயரற்ற பூச்சிக்களுக்கு பூரிப்பு ஏற்படுத்தி.
புதுப் பூச்சிகளுக்குப் பெயர் கண்டுபிடிக்க கண்டுபிடித்த அரசுத்துறை
விஞ்ஞானிகளும் பெயரறியா உடல் உருக்கி ஊற்றும் நோயன்றில்
ஒன்றாக ஒரு கிழமைக்குட் செத்துப்போயினர் என்று மகள் சொன்னாள்.
அவள் மிக மகிழ்ச்சியாய் இருக்கிறாள் இன்று மதியமிருந்து;
காலைதான் வைத்தியசாலை போயிருந்தாள் வேதனை தாளாது,
காலில் வளரும் சதை விடாய்மிகு விசித்திரப்புழுவினை வெட்டமுடியுமா
என்று கேட்டிருக்க.
அது ஒரு மாதத்துக்குள் மட்டும் செத்த பேரனது தலை அளவிற்குப்
பெருக்கக்கண்டிருந்தோம்.
அவள் தன் மாதக்கணக்கான வற்புறுத்தல் தாளாது,
பழைய கடையன்றில் நேற்று மகன் திருடி வந்து
புகைக்கு முகம் மூட அவள் பிறந்தநாள் பரிசென்றளித்த
கைக்குட்டைதனைக் கையூட்டு என்றிசைந்தெடுத்து
வரும் திங்கள் மாலைக்கு, பின்புற ஆலையிற்சேகரி கந்தகப்புகையில்
அழுந்திச் சாகக்கிடப்போர் பட்டியலில் மகள் பெயர் எட்டிமுன்வைத்தாளாம்
மருத்துவத்தாதி புழுப்பரவல் மற்றோருக்கும் பரவாதிருக்க.
இவளுக்கென்ன சந்தோஷமாய்ச் சாவாள்; எனக்கென்றால் எரிச்சல்;
இனி இவளுக்கும் மண்வெட்டி, மேலெழு மண்டையோடு தட்டி, நிணமணம்
முகர்ந்து கிடந்து சீழ் பிடி கையாலே கிடங்கு கிண்டிக்
கிடப்பதென்ன நான்தானே?
இவையெல்லாம் நினைத்தால்,
நித்திரைக்குப் போகாமல் இருக்கவும்கூடப் பயமாயிருக்கிறது.

0பினà¯à®©à¯à®à¯à®à¯:
Post a Comment
<< Home