கவிமனம்
விடிகாலையிருந்தே சொற்கள் விபரம்தப்பித்
தாம் சுழன்று ஆங்காங்கே கரணமிட்டு..
வெந்நீர்த்தேவையினை அடுப்புப்புகைவறுந்த அவளிடம்,
"வெதுப்புமுகிழ் வான்வர்ஷிப்பு" என்று (வாலற்ற) கவித்துவமாய் வேண்டி
வண்டியாய் வாய்அர்ச்சிப்பு வாங்கிக் கட்டிக்கொண்டேன்.
வெளிமுற்ற
இளஞ்செடி தொட்டு வெண்பனி கொட்டு
புதுமலர்மொட்டு சிறுமுத்தமிட்டு,
"தேன்சொட்டும்பால்நிறத்துஇளங்கன்னிமெதுகன்னம்" சொல்லக்கண்ட
மகள் சொல்லாமலே பாலர்பள்ளி தனியே இன்று தான்
சென்றாள்.
பின்,
"'சிண்டி குரோவாட்' நீள்விரல் அழகுப்பிஞ்சு வெண்டிக்காய்" கேட்டதற்கு,
நாகசாகிக்குண்டுக்கே நான் சவால் என்பது போற்
சொத்தைவிதைப்பரல் ஒட்டற்பூசணிச்சிலம்பது கையெடுத்து,
கனன்று கண்ணகியாய் கத்தினாள் க(ந)`ய்கடை(டி)க்காரி,
"சிந்திப்பாய், இச்சந்தை இனியென்னைச்
சந்தித்தாய், சிறுமனிதா, செத்தாய்."
தொடர்ந்தும் என்னைப் பணயம் வைத்து,
"எச்சிலொட்டாப் பயணச்சீட்டு எனக்கொன்று,
முன்மாலைமதுமணம்மாறாச்செங்கண் நடத்துனரே" எனறு செப்பி,
செருப்பால் அடியுண்டு பேரூந்தால் உதையுண்டு, தள்ளுண்டு,
பின், ஊர்ந்து,அலுவலகம் ஈரைந்து மணிவந்து,
"நல்நாளாய் நகரட்டும் நண்பரே இன்றும் உம் நாள்",
என வந்தனங்கள் பலகூற,
முன் வியந்து, பின் பயந்து,
முழுவேலைத் தரமும் தளமும்
இப்பின்நாள் அரைநாள் எனத்
தன்னால் விடுப்பில் விரைந்து வெளித்தது.
இனி எது சொல்ல, என் செய்ய?
காசு கொடுத்துக் கல்லடி பட்டது போல்
எல்லாமே நேற்று,
விமானத்தபால் வந்த விக்ரமாதித்யன் கவி
தொகுதியாய்ச் செய்த கலி.
இடி தாங்கும் -என் கவிதாங்கா-நண்பன்
நல்லுரை மெத்தச்சரி.
"ஊர்படும் பாட்டில் ஊமையன் அடித்தானாம்
விசில் என்றாற்போல்,
நாடெரியும்போது,
நாற்பது வயது நாயுனக்கேன் கவிதை நயம்?"
97 05 28

0பினà¯à®©à¯à®à¯à®à¯:
Post a Comment
<< Home