அலைஞனின் அலைகள்: கணம்

Friday, October 13, 2023

முப்பது வெள்ளித்துண்டங்கள்!

சுட்டிப் பெற்றவனை வெட்கப்படுத்திக் கொன்ற முப்பது வெள்ளிக்காசுகள்! குற்றம் சொன்ன குருக்கள் பெற்று விட்ட காசு பெற்ற நிலம் குயவர்வயல்!

 

முப்பது வெள்ளிவிதை முளைத்துப் பஞ்சாய் இலவு வெடித்துப் பரந்து எட்டுத்திசையும் எண்ணவொணாத்தேசத்தே விட்டு முளைத்த விழுது;

விழுது, குருதியுறைபெற்றமண்ணில் வெள்ளிகுட்டிபோட்ட வட்டியுடன் விழுது!

விழுது, பிய்த்த சதையில், பேய்தின்னப் பிணத்தில், சத்தமின்றிப் புத்தகமாய் முளைத்த வெள்ளி!

விழுது, சுட்டவனின் மொட்டை மாமன் ஒட்டடை தட்டும் தூசுக்குப் பட்டுமேல் துட்டு வைத்துத் தாங்கும் தாம்பாளக் குட்டி வெள்ளி!

குயவர்வயல் முப்பது காசு ஆரம்பித்த ஒரு வெள்ளிப்பெருக்கல்விருத் தியாகி உத்தமருக்கும் குருக்களின் சிலுவை சுமவென்று அலையும் சிலந்திவலை.   

8/4/2023 வெள்ளி 20:50 கிநிநே

0பின்னூடுகை:

Post a Comment

<< Home


 
Statcounter