அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, August 29, 2024

கொடிகளை எரியுங்கள்!

கொடிகளை எரியுங்கள்!

கோவணத்தைக் கட்டிக்கொள்ளுங்கள்!

கதிரெறியும் 

கொடிகளை எரியுங்கள்:

அரசு தரும் பீத்தற்

கோவணத்தைக் கட்டிக்கொள்ளுங்கள்!

நுமை எரிக்கும் கொடிகளை எறியுங்கள்!

பின்னால், எலிகள் வரும்! 

கோவணத்தை இரைக்கென நன்னும்!

எலிகளைக் கொல்வதற்குப் 

பூனைகளை அரசு தரும்!

பூனைகட்குப் பால்வேண்டாமா?

பால் வழங்கு மாடு தரும்

பேரரசு காருண்யத்தால்!

மாடு பேண வேண்டாமா?

மனைவியரை அரசு தரும்!

மனைவியர் மனையமைக்க

மக்கள் அரசே நிதியும் தரும்!

மக்கள் அரசே நிதியும் தந்தால்,

வட்டி முதல் யார் கொடுப்பார்?

கொடிகளை எரிப்பவரே

அரசு கேள் வட்டி கட்ட 

அரசுக்கே மண்டியிடும்

ஆகையினால்,

கொடிகளை எரியுங்கள்! 

கொடிதென்று கொள் எறி

கொடிகளை எரியுங்கள்!

மின்னுவண்ணக்கொடிகளை எரியுங்கள்!

உதிரச்செங்கொடிகளை எரியுங்கள்!

கரும்பச்சைக்கொடிகளை எரியுங்கள்!

கடல்நீலக்கொடிகளை எரியுங்கள்!

கதிர்மஞ்சட்கொடிகளை எரியுங்கள்!

ஈர்வண்ணக்கொடிகளை எரியுங்கள்!

மூவண்ணக்கொடிகளை எரியுங்கள்!

பல்வண்ணக்கொடிகளை எரியுங்கள்!

காளைக்கொடிகளையும் எரியுங்கள்!

காகக்கொடிகளையும் எரியுங்கள்!

மிருகக்கொடிகளையும் எரியுங்கள்!

பறவைக்கொடிகளையும் எரியுங்கள்!

கதிர்க்கொடிகளையும் எரியுங்கள்!

மதிக்கொடிகளையும் எரியுங்கள்!

உடுக்கொடிகளையும் எரியுங்கள்!

கண்ணகிகாள்!

திருகி உரு வித் தாய்த்

தொப்புட்கொடிகளையும்

அரிந்து தணல் எரியுங்கள்!

நுமை எரிக்கும் கொடிகளை எறியுங்கள்!

அரசகோவணத்தைக் கோர்த்துக் கொள்ளுங்கள்!

எரியுங்கள்! 

எல்லாமே தீய்ந்து

தீர்ந்து விடும்!

27 ஆவணி 2024 செவ்வாய் 00:35 கிநிநே



0பின்னூடுகை:

Post a Comment

<< Home


 
Statcounter