அலைஞனின் அலைகள்: கணம்

Saturday, April 28, 2018

அக்கரைத்தெருநாய்

அடுத்தாள்
பருப்பங்களையும் பருப்புகளையும்
அடி தடவுவதில்
தான் வளர்கிறது
அக்கரைத்தெருநாய்
கணியத்தரமென்று
தன் நடுவிரற்கடைநீளத்தால்
ஆழங்களையும் அகலங்களையும்
மீளப் புண் நோண்டுகிறது
வீடு பேதம் பிரியாது
சமைத்தாள் தட்டின்
உணவெல்லாம்
உரித்துக்கொண்டாடுகிறது
தானிட்ட பக்குவமாய்
இத்தெருச்சுவரெல்லாம்
தான்
தூக்கின கால்
பாய்ச்சின நீர்
வெடுக்கை முன்னிறுத்தி
தனதென்கிறது
என் தெருவை
அப்பால் அதன்
பின்னங்காலிடை தொங்கு
வாலுக்குப் பின்னால்
இளைக்க ஓடுகிறன
ஞானப்பாலுக்கேங்கும்
பூனைமயிர்த்
தவ்வல்கள்
கொள்
மாதிரிக் கொன்றி ரண்டாய்
எல்லோர் உள்ளாடைகளையும்
கௌவிப்போயிருக்கின்றது
அண்டைத்தெருநாய்!
ஊருக்குள்
அம்மணமாய் ஆளிருக்க
அத்தனையும் மொத்தமாய்
ஆச்சிரமம் உருவிப்போகிறது
அயோக்கியம்!
சுத்தம்!
பரிசுத்தம்!
.
.
.
04/27/2018

0பின்னூடுகை:

Post a Comment

<< Home