வால்களும் குதிகளும்
குரங்கின் வாலும் நாயின் வாலும்
குழைத்துப் புனைந்ததென் கூர்ப்பு வால்.
எரிகின்ற முனையும் குழைகின்ற திசையும்
எப்போது முளைக்கும் எனக்கே தெரியாது.
விலங்கும் பூப்பூக்கும் தாவரமும் ஊனுண்ணும்
விந்தைப்பூமியிலே உலவுன்றதென் குதிகள்.
கண்கள் அறுந்த காலக்குமிழிற் கிளர்ந்து
குதித்துக் குதித்துக் குதிர்ந்தெல்லாம் பெருங்குதிகள்.
அடுத்த விலங்கின் ஆதர்சம் காண் கண் துடித்து விளையாது
அந்தக விலங்கின் வால் விரிவின் செவ்வெரிவும் தண்குழைவும்.
ஊன்றிக் குதி நடக்கின்ற நிலம் குறித்து வால் முளைக்கின்ற
குருட்டுவிலங்கொன்றின் நீள்மூக்கிற் துளிர்ப்பது புறப்பார்வை.
விழியறு விந்தைப்பூமிக்குள் வில்லெடுப்பார் வேண்டாதார்.
'05 Feb., 14 03:23 EST

1பினà¯à®©à¯à®à¯à®à¯:
//எப்போது முளைக்கும் எனக்கே தெரியாது.//
எனக்குத் தெரியும் ;-)
கோலக் காற்றின் கால் படு நேரெமெல்லாம்
வேலையற்று வீண்சிந்தை போக்குந் நேரமெல்லாம்
விடைக்கும்;விரட்டும்; விடுதலை மிக்க வாலல்லவா?
வீண் வம்பல்ல அது;வால் தனது வேலையைச் செய்யட்டும்
விட்டுவிடுங்கள்; வாலுக்குத் தெரியும் பாலையும் கள்ளையும் பிரிக்க
By
SnackDragon, at Monday, February 14, 2005 9:56:00 AM
Post a Comment
<< Home