அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, November 10, 2005

அவத்தை



இடைவிடா இருநாட்களுக்கு
இறந்தார் பற்றிப் பேசுகிறோம்;
எம்மைப் பற்றி இருந்தது பற்றி
எதுவும் பற்றாது இறந்தது பற்றி
இருப்பைப் பற்றி இறப்பது பற்றி
அன்று பற்றி இன்று பற்றி
கலந்தது பற்றிக் கரைவது பற்றி
இருந்ததெல்லாம் பேசி இழந்த பின்
அறுந்திருக்கிறோம் அடுத்தோர்
இறப்பாரை எதிர்பார்த்து.

அவமூடும் அவத்தை
ஆங்கு.

'05, நவம். 10 வியா. 04:38 கிநிநே.

3பின்னூடுகை:

  • fine

    By Anonymous Anonymous, at Monday, November 14, 2005 8:39:00 PM  

  • உங்கள் எழுத்து எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது நண்பரே.
    வாழ்த்துக்கள்.

    By Anonymous Anonymous, at Tuesday, January 10, 2006 4:18:00 AM  

  • //இடைவிடா இருநாட்களுக்கு
    இறந்தார் பற்றிப் பேசுகிறோம்;
    எம்மைப் பற்றி இருந்தது பற்றி
    எதுவும் பற்றாது இறந்தது பற்றி
    இருப்பைப் பற்றி இறப்பது பற்றி
    அன்று பற்றி இன்று பற்றி
    கலந்தது பற்றிக் கரைவது பற்றி
    இருந்ததெல்லாம் பேசி இழந்த பின்
    அறுந்திருக்கிறோம் அடுத்தோர்
    இறப்பாரை எதிர்பார்த்து.//

    உண்மை உணர்த்தும் நல்ல வரிகள்

    By Blogger sukan, at Thursday, July 31, 2008 8:50:00 PM  

Post a Comment

<< Home