அலைஞனின் அலைகள்: கணம்

Wednesday, June 29, 2005

நாள்வீராங்கனையின் மரணம்


'05 யூன் 27, திங். 11:05 கிநிநே.



கடந்த பாதையில் கழுத்தெறிந்து தழை
அறுந்த மரம் போல விரிந்து கிடந்தாள்.

நாள்,
ஒன்றில் ஆட்டும் காற்று
இரண்டில் தோல் சுருக்கும்
மூன்றில் மணக்கும் மூக்கு
மிதித்தும் உதைத்தும்
சிதைந்தழியும் சிறகு.

சிதை உச்சி வெயில்.

உறைந்து
ஒடுங்கும் விரல்கட்குள்
நன்னும் எறும்பு கிள்ளக்
கொஞ்ச இரை.

சின்னக் குருவி சில
இன்னும் காத்திருக்குமோ
தின்னும் திசை தேடி?

அடி
விரைந்து
நடப்பேன்
வீட்டுக்கு.


'06 ஜூன், 29 புத. 12:53 கிநிநே.

1பின்னூடுகை:

  • //சின்னக் குருவி சில
    இன்னும் காத்திருக்குமோ
    தின்னும் திசை தேடி?//
    இந்த வரிகளும் படமும் முன்பு கண்ட பாதைப் பறவையுடலங்களும், சரியோ தவறோ மனிதரைக் குற்றவாளியாகப் பார்க்க வைக்கின்றன.

    By Blogger சுந்தரவடிவேல், at Saturday, July 16, 2005 2:01:00 PM  

Post a Comment

<< Home


 
Statcounter