வி.ப.த.எ.
விருந்துக்குப் பழரசம் தயாரிப்பது எப்படி?
கவலைப்படாதீர்கள்; மிக இலகு.
விதைகளை நாட்டவேண்டாம்;
விடிகாலை நீர் ஊற்றவேண்டாம்;
உரங்களைச் சேர்க்க வேண்டாம்;
மரங்களைக் காக்கவேண்டாம்;
பழங்களை,
......................பார்க்கவே வேண்டாம்.
பொடிநடையில், கடையிற் கிடைக்கிறது
பொதிபடுபழரசப்பொடி; பழமே சேராது
வேதிம நறுமணமூடி, பழப்பொடி;
தோடை தொடங்கி தூரியன்வரை, பல பள
பழப்படங்களோடு பெட்டியுட் பக்குவத்தில்.
விருந்தினரை எண்ணிக்கொள்ளுங்கள்.
வெறும் நீரை முகந்தோ முகராமலோ
இறைந்து நிறையுங்கள்; அளந்து சீனி
கலந்து கொள்ளக் கைநுனியிற் கரண்டி;
விருந்தினர் தேர்வில், விரும்பின தேர்வில்,
ஒரு சிட்டிகை தோடம்பொடி
..................................தூரியன்பொடி
.................................புளிப்பொடி
................................ப்ரூன்பொடி.
வரும் விருந்துக்குப் பழரசம் பரிமாறுவது இலகு.
~~
அரசியற்கட்டுரை அமைப்பது அடிப்படையிற் சுலபம்;
மனிதநேயக்கட்டுரையுங்கூட.
ஒரு சிட்டிகை பாசிசப்பொடி
..................................தேசியப்பொடி
..................................புலிப்பொடி
..................................புனுகுப்பொடி
'06 மே 04 வியாழன் 04:05 கிநிநே.

2பினà¯à®©à¯à®à¯à®à¯:
ayyoo...மேட்டருக்கும் படத்துக்கும் ஏதுங்கனாச்சும் தொடர்பு இருக்கா....
வெளங்களையே? :(
By - யெஸ்.பாலபாரதி, at Thursday, May 04, 2006 3:40:00 AM
ஒன்றுமே இல்லை. இலங்கை குறித்து இணையத்திலே (நாட்டிலே) எழுதப்படும்
எழுதும் அரசியற்கட்டுரைகளுக்கும் நடைமுறைச்சிக்கல்களும் உள்ள சம்பந்தமேதான் ;-)
By -/பெயரிலி., at Thursday, May 04, 2006 4:08:00 AM
Post a Comment
<< Home