அந்த முகமூடி
அவசரமாய்ப் போட்ட முகமூடி
பால்ய நண்பன் போக
ஆறுதலாய் நான் அவிழ்த்தேன்.
மனதிற் பக்குவம் பண்ணவேண்டும்.
அடுத்தமுறைக்கும் அதிகாலையிலேயே
அதற்கோர் அவசரம் வரலாம்.
அச்சச்சோ....
ஆங்காங்கே ஆக்கு காகித மட்டை கிழிந்ததுவாய்..
கவனித்திருப்பானோ?
சரி, போகட்டும் விடு;
அவன் அணிந்தது மட்டுமென்ன, தங்க அணிகலனோ?
ஆங்காங்கே காரைபெயர்ந்த கல்வீடாய்...
வீட்டு மறுமூலைக்குள் மனைவி குரல்
காலடியோடு கூடி வரும்.
அவசரமாய்ப் பலதுள்,
அவளுக்கானது தேடிப் போட்டு,
அதனூடாய்க் கூடிச் சிரித்தேன்.
பதிலுக்கு அவளும்.
இருக்காதா பின்னர்?
அவளுக்குப் பிடித்த அசட்டு மூடியன்றோ இது?
பின்னர் குழந்தைக்கு,
கீழ்வீட்டிற் குடியிருப்போனுக்கு,
வீதியிற்போன பத்திரிகைக்காரருக்கு,
இப்படியாய்,
கோலிகள் பல தூக்கிப்போட்டு
விழாது பிடித்திருக்கும் வித்தைக்காரனாய்,
எத்தனையோ எடுத்து,
மாற்றி
எறிந்திருப்பேன்,
கணத்தனை நேரத்தில்,
கடுகுவிதையளவு இட நகர்வில்....
முகமூடிகள் மாற்றும் இலாவகம்,
கண்ணியவானுக்களுக்கு
காலம் கற்பிக்கும் கவின் கலை
என்று கூடப் பட்டிருக்கும்.
அணிகையிற் கனமில்லை;
அகற்றையிலே வலியில்லை.
மனிதர் அவைகளிலே
அவை அணியும் சுகமே,
அணிந்து நானாடும் நாட்டியத்தின் நளினமே
சிலவேளை மிகைப்பட்டுத் திகட்டியது என்று
எனக்கொரு சித்தப்பிரமைப் பெருமை.
இரவு;
குழந்தைக்கொரு நெற்றிச் சிறு முத்தத்துடன்
அதனருகே அகற்றிவைத்தேன் அதற்கான முகமூடி.
மறு காலை அது மார்பிற் தவழ்கையிலே
மாட்டினால் போதும் என் முகத்தே மறுபடிக்கு,
மனைவிக்கொரு நீள் உதட்டு முத்தத்தின் பின்
மனைவிளக்கு எட்டி அணைத்ததுடன்
இருளில் இழுத்து
அவிழ்த்தெறிந்தேன் அவளுக்காய் முகம் மூடியது.
சுதந்திரக்காற்று முகம் தழுவ,
எனக்கான மூடியற்ற கனவுகளிற்
தூங்கிப் போகாமல் இருக்க
முயற்சித்துத் தோற்றுப்போனேன்.
என் கனவுகள் என்றும் அச்சம் தருபவை;
குரோதமுகத்துடன் கொடுவிழிப்பார்வையில்
உலாவருவான் நேரில் அறியாத ஒருவன்
முகமெல்லாம் நிராசை நிர்வாணப்பட்டிருக்க.
அவன் முன்னே நடுங்கிச் சிறு பாலகனாய்
அஞ்சி ஒளிந்து அவம் திரிதலே என் வேலை.
ஆதலினால், வேண்டாது வெறுத்திருந்தேன்
என் இராத் தூங்கற் பொழுதுகளை.
இன்றைக்கும்
என் பாலிய நண்பனை, என்னைப் பரிகசித்து
பயங்கரமாய் மெய் சொல்லி எம் மேனி நடுங்கச்
சிரித்தான் அக்கொடுமுகத்தான்.
அஞ்சி விதிர் விதிர்த்து அதிர்ந்தெழுந்தேன்;
அச்சம் அகல, ஆசுவாசம் நான் பெற்றிருக்க,
பச்சைக் குளிர் நீரைக் கை அள்ளி
முகம் நனைத்து மீள்கையிலே
அறை ஆளுயர ஆடியிலே
அட்டகாசமாய்ச் சிரித்து
அவன்.
நான் அறியா என்
அந்த அருவருப்பு மூடியினை
அகற்றப்போகையிலே
முதன்முதலாக
மூடி நிலை பெயர மறுத்தது;
மோசமாய்ச் சொந்த முகம் வலித்தது.
-'98 ஆனி 23, செவ்வாய் 11:57 CST
பால்ய நண்பன் போக
ஆறுதலாய் நான் அவிழ்த்தேன்.
மனதிற் பக்குவம் பண்ணவேண்டும்.
அடுத்தமுறைக்கும் அதிகாலையிலேயே
அதற்கோர் அவசரம் வரலாம்.
அச்சச்சோ....
ஆங்காங்கே ஆக்கு காகித மட்டை கிழிந்ததுவாய்..
கவனித்திருப்பானோ?
சரி, போகட்டும் விடு;
அவன் அணிந்தது மட்டுமென்ன, தங்க அணிகலனோ?
ஆங்காங்கே காரைபெயர்ந்த கல்வீடாய்...
வீட்டு மறுமூலைக்குள் மனைவி குரல்
காலடியோடு கூடி வரும்.
அவசரமாய்ப் பலதுள்,
அவளுக்கானது தேடிப் போட்டு,
அதனூடாய்க் கூடிச் சிரித்தேன்.
பதிலுக்கு அவளும்.
இருக்காதா பின்னர்?
அவளுக்குப் பிடித்த அசட்டு மூடியன்றோ இது?
பின்னர் குழந்தைக்கு,
கீழ்வீட்டிற் குடியிருப்போனுக்கு,
வீதியிற்போன பத்திரிகைக்காரருக்கு,
இப்படியாய்,
கோலிகள் பல தூக்கிப்போட்டு
விழாது பிடித்திருக்கும் வித்தைக்காரனாய்,
எத்தனையோ எடுத்து,
மாற்றி
எறிந்திருப்பேன்,
கணத்தனை நேரத்தில்,
கடுகுவிதையளவு இட நகர்வில்....
முகமூடிகள் மாற்றும் இலாவகம்,
கண்ணியவானுக்களுக்கு
காலம் கற்பிக்கும் கவின் கலை
என்று கூடப் பட்டிருக்கும்.
அணிகையிற் கனமில்லை;
அகற்றையிலே வலியில்லை.
மனிதர் அவைகளிலே
அவை அணியும் சுகமே,
அணிந்து நானாடும் நாட்டியத்தின் நளினமே
சிலவேளை மிகைப்பட்டுத் திகட்டியது என்று
எனக்கொரு சித்தப்பிரமைப் பெருமை.
இரவு;
குழந்தைக்கொரு நெற்றிச் சிறு முத்தத்துடன்
அதனருகே அகற்றிவைத்தேன் அதற்கான முகமூடி.
மறு காலை அது மார்பிற் தவழ்கையிலே
மாட்டினால் போதும் என் முகத்தே மறுபடிக்கு,
மனைவிக்கொரு நீள் உதட்டு முத்தத்தின் பின்
மனைவிளக்கு எட்டி அணைத்ததுடன்
இருளில் இழுத்து
அவிழ்த்தெறிந்தேன் அவளுக்காய் முகம் மூடியது.
சுதந்திரக்காற்று முகம் தழுவ,
எனக்கான மூடியற்ற கனவுகளிற்
தூங்கிப் போகாமல் இருக்க
முயற்சித்துத் தோற்றுப்போனேன்.
என் கனவுகள் என்றும் அச்சம் தருபவை;
குரோதமுகத்துடன் கொடுவிழிப்பார்வையில்
உலாவருவான் நேரில் அறியாத ஒருவன்
முகமெல்லாம் நிராசை நிர்வாணப்பட்டிருக்க.
அவன் முன்னே நடுங்கிச் சிறு பாலகனாய்
அஞ்சி ஒளிந்து அவம் திரிதலே என் வேலை.
ஆதலினால், வேண்டாது வெறுத்திருந்தேன்
என் இராத் தூங்கற் பொழுதுகளை.
இன்றைக்கும்
என் பாலிய நண்பனை, என்னைப் பரிகசித்து
பயங்கரமாய் மெய் சொல்லி எம் மேனி நடுங்கச்
சிரித்தான் அக்கொடுமுகத்தான்.
அஞ்சி விதிர் விதிர்த்து அதிர்ந்தெழுந்தேன்;
அச்சம் அகல, ஆசுவாசம் நான் பெற்றிருக்க,
பச்சைக் குளிர் நீரைக் கை அள்ளி
முகம் நனைத்து மீள்கையிலே
அறை ஆளுயர ஆடியிலே
அட்டகாசமாய்ச் சிரித்து
அவன்.
நான் அறியா என்
அந்த அருவருப்பு மூடியினை
அகற்றப்போகையிலே
முதன்முதலாக
மூடி நிலை பெயர மறுத்தது;
மோசமாய்ச் சொந்த முகம் வலித்தது.
-'98 ஆனி 23, செவ்வாய் 11:57 CST
0பினà¯à®©à¯à®à¯à®à¯:
Post a Comment
<< Home