அலைஞனின் அலைகள்: கணம்

Friday, November 26, 2021

அரசியல் மறை


இத்தனை நாள் வளர்த்த அரசியலை என்ன செய்யலாம் என்றேன்:
பிள்ளையின் புத்தகப்பெட்டிக்குள்ளே மறைக்கலாம் என்கிறாய்.
மறைகளே துன்பத்தின் காரணமென்கிறேன்!
நூலற, திரி பிரித்துத் திறந்து வைக்கிறேன்! 
தரவுகள் போதும்! வரலாறு வேண்டாம்! 
விசனவசனங்கட்கப்பால், வரலாறுகள் 
நுனிமயிரையும் விடுதலை செய்ததில்லை.
தளையறுத்த தனியொருவனென்பது
விட்டு விடுதலை!
அடங்காக்காற்றைக் குடத்துநீர் அகற்றட்டும்!

ஒக்ரோபர் 13, 2021

0பின்னூடுகை:

Post a Comment

<< Home