பூனைமழை
முகத்தில் காய்ந்த மண் கன்னி கழிக்கும் கந்தகநெடி
தடவிப்போகிறது அடுத்த ஊர் பார்க்க காலரவம் ஊராமல்
வந்த தும் தெரியாமல் நின்று போனதும் அழியாமல்
இரைக்கு மட்டும் நிலைப்பதாக வந்து போகும்
இரக்கமேயில்லாத் தான்தோன்றித் தூறல் மழைப்பூனை மிருகமிருது
அடித்துடைத்துத் துயர்பெருக்கி ஆவி சோர ஆள் பார்த்துச்
சுழித்து வரும் அதன் அப்பன் கூவற்சூறாவளி ஒரு கொல்புலியென்பாயா?
ஏது பிழை, அதன் கீறுகால் இடிகூறலில்? கூர்க்கண் எரிமின்னலில்?
வேணுமானால், அதன் வால் கூட வரும் கள்ளன், குள்ளக்காற்றை நீ கேட்டுப்பார்!
மடிப்பூனையென்றாலென்ன? அறைபுலியென்றாலென்ன?
அடைவீட்டுக்கும் அடர்காட்டுக்குமான கூட்டப்
பூனை வகை ஆன பொதி பொழிபுதிர்மழை!
31 மார்ச் 2025 திங்கள் 21:40 கிநிநே
0பினà¯à®©à¯à®à¯à®à¯:
Post a Comment
<< Home