எளிமை
எளிமையான வர்ணப்படமொன்றிலே,
கறுத்தது கறுப்பில்லை
சிவத்தது சிவப்பில்லை
வெளுத்தது வெள்ளையில்லை
எளிமையான உருவப்படமொன்றிலே
ஒரு பெருங்கோடு இன்னொரு சிறுகோடு
ஒரு சிறுவட்டம் பிறிதொரு பெருவட்டம்
படமொன்றினைக் காண்பவருக்கு
வர்ணமும் உருவமும்
எளிதில்லை.
எளிதானது, பார்வை!
எளிதற்றது , பார்வை!
பார்வை, எனதானது!
0பினà¯à®©à¯à®à¯à®à¯:
Post a Comment
<< Home