அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

அறுவடை

தூக்கம் தொலைக்கும் பெரும் அச்சங்கள்,
பிறரது தாக்குதல்கள் அல்ல,
சொந்த வெற்று வெளிப் பித்துக் கூச்சல்களே.
வெகுகாலம் முன்னே பயணிக்கவிழை கட்டியக்காரன்
தேவையற்ற முகங்கொடுத்தலிலா தன் முகம் தொலைத்திருப்பான்?
விதையெறியா நிலத்தில் வீண்பெய் பேய்மழை எதற்கு?

எள்ளெடுத்து மையமிட வரிசை எத்தனையோ இருக்கையிலே
கும்பலின் குதிருக்குள் குழப்பம் சதிராட்டாமல்
மௌனித்தல்,
மங்கும் இக்காலத்தேனும்,
வெகு நிதானம் எனத் தெரியும்.
உள்ள முகம் மெல்லத் தன் உரு அழித்துப் புழுவெனப் போகும்முன்
வீணே வெடி சத்தங்களை வரும் சத்தியகாலங்களுக்குச்
சேகரித்து பத்தியமான நீண்ட தூங்குதல் பண்பெனப்படும்.
செக்கிழுத்து வட்டமிடும் மாடுகள்,
நாற்று நெல் நிரலாய் நட்டுவிட்டால்,
சொந்தமென அள்ளிச் செல்ல,
பருவம் வர அறுவடைக்கு,
வராமலா போயிருக்கும்,
பயணித்துப் பவனி ஒன்று
புடைத்துப் பரந்த வயலுக்கு?

0பின்னூடுகை:

Post a Comment

<< Home