அது வேறு சிந்தனை
"............
...பரிசுத்த முத்துமுத்தாய்
எத்தனை மை இறைத்திருக்கும்,
பசியெடுத்த நாட் குழவிக் கண் துளிபோல்!
கழிவென்றும் கரவென்றும்
குப்பைத்தொட்டி உறை(யக்)கண்டது எத்தனை,
அறியாக்குழந்தை மலசல இடை உடுதுணிபோல்!
காலை, மதியமின்றிக் கருக்கிய மாலைவரை
எத்தனை மணித்துளி இடைவிடாப் பெருநடை,
கடல், கரை, தலம், மரம், வனமென வரையற்று
எத்தனை புகலிடம் எத்தனை தரிப்பிடம்,
பேயெனப் பின்துரத்தும் மூளைச்
சிந்தனை, வடிகால் எழுத்துப் பிரதியிட,
தூங்காத சேய்க்குப் பேய், பொம்மை, பாட்டு,
பயம், போக்குக் காட்டித் தூங்கற்செய்தல்போல்!....
..............."
-நாபத்து ஆண்டு முன் பேசாமலே,
பிறந்து மூச்சற்றுப்போன பிள்ளைக்காய்,
பேரன்கண்டபின்னும் நினைவெடுத்து,
புலம்பிப் பிதற்றும் பெற்றவள் போல்,
பத்துநாள்மேலாய்,மழைக்கறையான்
பிரியத்துடன் பிய்த்துத்தின்ற
என் முதல் ஒற்றைச் சிறுகவிக்காய்
நான் ஒப்பாரி வைத்தழுத
அவலம் தாங்காத் தங்கை சொன்னாள்,-
"அண்ணா, இங்கே பார்,
ஆர் பெறுவார் உன்னைபோல்,
ஆயிரம் உயிர்கட்கு ஆயுட்காலம்வரை
ஆக்கி அன்னதானம் அளித்த புண்ணியம்?
இதைவிட உன் கவிக்கு
என்ன பலன் தேவையினி?"
- '97 யூன், 15
...பரிசுத்த முத்துமுத்தாய்
எத்தனை மை இறைத்திருக்கும்,
பசியெடுத்த நாட் குழவிக் கண் துளிபோல்!
கழிவென்றும் கரவென்றும்
குப்பைத்தொட்டி உறை(யக்)கண்டது எத்தனை,
அறியாக்குழந்தை மலசல இடை உடுதுணிபோல்!
காலை, மதியமின்றிக் கருக்கிய மாலைவரை
எத்தனை மணித்துளி இடைவிடாப் பெருநடை,
கடல், கரை, தலம், மரம், வனமென வரையற்று
எத்தனை புகலிடம் எத்தனை தரிப்பிடம்,
பேயெனப் பின்துரத்தும் மூளைச்
சிந்தனை, வடிகால் எழுத்துப் பிரதியிட,
தூங்காத சேய்க்குப் பேய், பொம்மை, பாட்டு,
பயம், போக்குக் காட்டித் தூங்கற்செய்தல்போல்!....
..............."
-நாபத்து ஆண்டு முன் பேசாமலே,
பிறந்து மூச்சற்றுப்போன பிள்ளைக்காய்,
பேரன்கண்டபின்னும் நினைவெடுத்து,
புலம்பிப் பிதற்றும் பெற்றவள் போல்,
பத்துநாள்மேலாய்,மழைக்கறையான்
பிரியத்துடன் பிய்த்துத்தின்ற
என் முதல் ஒற்றைச் சிறுகவிக்காய்
நான் ஒப்பாரி வைத்தழுத
அவலம் தாங்காத் தங்கை சொன்னாள்,-
"அண்ணா, இங்கே பார்,
ஆர் பெறுவார் உன்னைபோல்,
ஆயிரம் உயிர்கட்கு ஆயுட்காலம்வரை
ஆக்கி அன்னதானம் அளித்த புண்ணியம்?
இதைவிட உன் கவிக்கு
என்ன பலன் தேவையினி?"
- '97 யூன், 15
0பினà¯à®©à¯à®à¯à®à¯:
Post a Comment
<< Home