அவள் என்ற உனக்கு
குளிருறுத்து விடிகாலைப் போர்வைக்குள்
கால்முடக்கி முயங்கிக் கிடக்கையிலும்
திரை பின் விழு நிழலெனப் பெண் நீ;
காலை ரொட்டிக்கு முட்டைபொரிக்கையிற்
பின்தட்டிக் கையிழுத்து,
"கரையா எண்ணெய்க்கொழுப்பு
படியாதோ உங்கள் இதயமென்று?"
சொல்லிக் கவலையுற்றதாய் ஓருணர்வு;
தோள்தொங்கு தோற்பை நூற்களுடன்
ஆய்கூட முச்சந்தி கடக்கையிலே,
கைபற்றிப் பதறி உள்ளிழுத்து,
"பார்த்து; பார்த்து;
பச்சைவிளக்கென்னும் பற்றவில்லை"
என்று உருவற்று ஓருயிராய் என்பின்னே
எச்சரித்துப்போனது,
சொல், நீயன்றோ?
என் துக்கங்கட்கு விலக்குத்தந்தவளே,
கல்லூரிக்கட்டிடமுட் பார்த்தாயெனில்,
என் உலகு வெளி(ச்)-சுருங்கியிருக்கும்;
ஒரு சின்னவறை, சில புத்தகங்கள், சிறு வானொலி,
நின்நினைவு புதைபட்ட புகைப்படச்சேமிப்பு;
மிகுதிவாழ்க்கை,
தண்ணீர் அழுக்கிலும் அதுகணக்கிடு தாயத்திலும்
மூக்கின்மேல், மேலுதட்டில் மச்சம்கொள் அவளிலும்;
வந்தமர்ந்தோ அமராமலோ கணணி கடிதெனத்திறந்து,
'அ' பெயர் தொடங்கு மின்அஞ்சலெல்லாந்தேடிக்கண்டு
அன்றையதின என்மின்னேற்றம் நான்பெறுதல்கண்டு
என் கூடேயிருந்து அருகே யாரோ
குலுங்கியழுததாய் ஓர் எண்ணப்படலம்;
பின் பொழுதெல்லாம்,
நீ தந்த நினைவுக்கோப்பை, உட் தேனீருடன்,
கழிவு நீர் கலங்கல் கணக்கிடுகையிலும்
கண் நீர் கலங்கிக் கணக்கிலடங்காக்
கனம் என்றதென் காதற் சிறுமனம்;
மீள,
மாலைச்சூரியன்துணை தனிநீள் மரநடைப்
போதினில் கூடவே ஓர் அருவவுரு,
"ரோசா லக்ஸ்சம்பேர்க் பற்றிப் பேசி"
நடந்தது பொறியாய் இன்னும் என் புத்திக்கு;
கண்ட, கடந்த, கடக்காத, காணாத
பெண்கள் எங்கெங்கும் சக்தியாய்
முகம், நடை, நகை, அகம் என
சுட்டுவிரல் வெட்டு நகத்துண்டளவேனும்
ஒட்டிக்கிடந்ததுன் ஒற்றுமைத்துளி.
பின், துக்கத்தே தொலை பேசி,
கட்டிற்சட்டமருகு,
மர(ன)ச்சட்டமிட்ட உன்சிறு பெட்டிப்படம்,
மின்விளக்குடன் இழுத்தணைக்கையிலே,
விஸ்வரூபமெடுத்து,
இவ்விரவிற்கும் எவ்விரவிற்கும்போல்,
வெறிகொண்டாடிடும் வீரியவிஷவேதனை.
து(¡)க்கத்தே,
தரித்துப்புறப்படும் புகையிரதமும் நிலையமுமாய்
நீ-நான்.
தூர நின்றென் துயர்நின்தோள்கொள்பேதையே,
இதுதான் என் நியதியெனில்,
இன்னும் எத்தனைகாலங்கட்கு
விதித்துள்ளாய் எனக்கு,
-இரவுகளில், உன் நினைவுகளில் உழன்றெழுந்து,
கனவுகளில்,
புகையிரதநடைபாதைகளில், பெருஞ்சுவரில்
உன் அரூபத்துடன் நான் நடக்கும்
இந் நெடு நெருப்பு நாட்கள்?
கால்முடக்கி முயங்கிக் கிடக்கையிலும்
திரை பின் விழு நிழலெனப் பெண் நீ;
காலை ரொட்டிக்கு முட்டைபொரிக்கையிற்
பின்தட்டிக் கையிழுத்து,
"கரையா எண்ணெய்க்கொழுப்பு
படியாதோ உங்கள் இதயமென்று?"
சொல்லிக் கவலையுற்றதாய் ஓருணர்வு;
தோள்தொங்கு தோற்பை நூற்களுடன்
ஆய்கூட முச்சந்தி கடக்கையிலே,
கைபற்றிப் பதறி உள்ளிழுத்து,
"பார்த்து; பார்த்து;
பச்சைவிளக்கென்னும் பற்றவில்லை"
என்று உருவற்று ஓருயிராய் என்பின்னே
எச்சரித்துப்போனது,
சொல், நீயன்றோ?
என் துக்கங்கட்கு விலக்குத்தந்தவளே,
கல்லூரிக்கட்டிடமுட் பார்த்தாயெனில்,
என் உலகு வெளி(ச்)-சுருங்கியிருக்கும்;
ஒரு சின்னவறை, சில புத்தகங்கள், சிறு வானொலி,
நின்நினைவு புதைபட்ட புகைப்படச்சேமிப்பு;
மிகுதிவாழ்க்கை,
தண்ணீர் அழுக்கிலும் அதுகணக்கிடு தாயத்திலும்
மூக்கின்மேல், மேலுதட்டில் மச்சம்கொள் அவளிலும்;
வந்தமர்ந்தோ அமராமலோ கணணி கடிதெனத்திறந்து,
'அ' பெயர் தொடங்கு மின்அஞ்சலெல்லாந்தேடிக்கண்டு
அன்றையதின என்மின்னேற்றம் நான்பெறுதல்கண்டு
என் கூடேயிருந்து அருகே யாரோ
குலுங்கியழுததாய் ஓர் எண்ணப்படலம்;
பின் பொழுதெல்லாம்,
நீ தந்த நினைவுக்கோப்பை, உட் தேனீருடன்,
கழிவு நீர் கலங்கல் கணக்கிடுகையிலும்
கண் நீர் கலங்கிக் கணக்கிலடங்காக்
கனம் என்றதென் காதற் சிறுமனம்;
மீள,
மாலைச்சூரியன்துணை தனிநீள் மரநடைப்
போதினில் கூடவே ஓர் அருவவுரு,
"ரோசா லக்ஸ்சம்பேர்க் பற்றிப் பேசி"
நடந்தது பொறியாய் இன்னும் என் புத்திக்கு;
கண்ட, கடந்த, கடக்காத, காணாத
பெண்கள் எங்கெங்கும் சக்தியாய்
முகம், நடை, நகை, அகம் என
சுட்டுவிரல் வெட்டு நகத்துண்டளவேனும்
ஒட்டிக்கிடந்ததுன் ஒற்றுமைத்துளி.
பின், துக்கத்தே தொலை பேசி,
கட்டிற்சட்டமருகு,
மர(ன)ச்சட்டமிட்ட உன்சிறு பெட்டிப்படம்,
மின்விளக்குடன் இழுத்தணைக்கையிலே,
விஸ்வரூபமெடுத்து,
இவ்விரவிற்கும் எவ்விரவிற்கும்போல்,
வெறிகொண்டாடிடும் வீரியவிஷவேதனை.
து(¡)க்கத்தே,
தரித்துப்புறப்படும் புகையிரதமும் நிலையமுமாய்
நீ-நான்.
தூர நின்றென் துயர்நின்தோள்கொள்பேதையே,
இதுதான் என் நியதியெனில்,
இன்னும் எத்தனைகாலங்கட்கு
விதித்துள்ளாய் எனக்கு,
-இரவுகளில், உன் நினைவுகளில் உழன்றெழுந்து,
கனவுகளில்,
புகையிரதநடைபாதைகளில், பெருஞ்சுவரில்
உன் அரூபத்துடன் நான் நடக்கும்
இந் நெடு நெருப்பு நாட்கள்?
0பினà¯à®©à¯à®à¯à®à¯:
Post a Comment
<< Home