அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

தனிப்படத் தெரிந்த ஒருத்திக்கு...

இ·து
அந்நியன் ஒருவனின் கல்லறை;
நான் ஒரு தற்காலிக குடியிருப்பாளன் மட்டுமே.

இறந்தும் வாழ்பவர்கள் உண்டு;
வாழ்ந்தும் இறந்தவர்கள் உண்டு.
முதல்வரியில் நடக்கப்புறப்பட்டவன்
கண் தவற, சரிந்து இங்கே
இரண்டாம் வரிப்புதைமணலிற் தேங்கிக் கிடக்கிறேன்.

எனது காளை மீறல்களுக்கு,
உன் முதுகிற் சூட்டுத்தழும்புகள்.

மதம் பிடித்த
விலங்குப்பண்ணையில் கொம்பெடுத்துக் குத்த
மனம் நோகும் நோஞ்சான் மாடுகள் நாம்.

விட்டுக்கொடுப்புகள்,
விபரம் புரியாத்தன்மையாய்
விளங்கப்பட்டுகையில்
நம் தலையில்
நீர் வார்ப்பு,
சேற்றுழவு,
நாற்றுநடுகை.

மலைப்பிரசங்கங்களும்
குகைப்பிரசங்கங்களும்
போர்க்களப்பிரசங்களும்
வெறும்
கொலைப்பிரகடனச்
சட்டாம்பிள்ளை உத்தியோகம்
பண்ணிக் கிடக்கிறன.

கல்லெடுத்து
அடிக்கத்தெரிந்த மனிதர்கள் மத்தியில்
கடிக்கத் தெரிந்த பாம்புகள் மட்டுமே
ஜீவித்திருக்கமுடியும்.

தோழி,
வா,
இனியாகுதல்,
விடமேறிக்
கடித்திருக்க வேண்டாதெனிலும்,
போர்ப்பிரசங்கிகள் பயந்தொதுங்க,
வெடிப்புறப் பேசி,
ரௌத்திரம் பழகுவோம்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home