அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

சாயைகள்

எனது சாயைகள் எனக்குச் சாதகமாய்த் தெரியவில்லை;
சிலவேளைகளிற் பாதகமாகவுமே;
அப்பா முகம் மூக்கு நுனியில் ஒட்டிக் கிடந்தால்,
அவர் போலவே கோபத்திற் சீறிப் போக எதிர்பார்ப்பு;
அண்ணன், தம்பி, மாமன், மருகன் என்ற அத்தனை பேருக்கும்
என் செயல் முகம் கொடுக்கவேண்டும்,
அவர் செயல் நான் பதிலுரைக்கவேண்டும்.
என் இயல்பின் இருப்பு அவரில் என் சாயைகளில் இழுத்துக் காய்
பழம் தெரியப்படும்.
சாயைகள் சரியோ பிழையோ சங்கடங்களே விற்றுப்போகும்,
கூட வந்து கொள்ளி வைக்கும் கூடாக்குணங்களென.
சாயைகள் விற்கவும் இயலாமல் கூடவே சட்டைப்பை வைக்கவும் முடியாமல்
மறைத்து மறைத்து இல்லாத சாரங்களைச் சாயைக்குச் சாயமிட்டு
எத்தனை நாள் இப்படி சாகசம் பண்ணியிருக்க,
எல்லாச் சாயை தேடு சமூகத்திற்கெல்லாம் நான்?

0பின்னூடுகை:

Post a Comment

<< Home