கிழக்குத்தீமோர் மீதொரு அ-க-விதை
தூக்கியோ தூற்றியோ ஏதும் எழுதவில்லை,
Time வந்து நாளாகி,
CNN கண்ட இரவேகி,
நாட்டதிபர் உரையாற்றி, வழிந்து மணி கரைந்தோடியும்கூட
- திமோர் பற்றியோர் அ க விதை.
அலர் அறுப்புக்களை எழுதி அலுத்துவிட்டது மனது
அல்லது அரித்துவிட்டது மூளை;
இனி நம்பிக்கையை நம்முள் விதைக்க நம்பிக் கை எழுதி நகர
மறுக்கிறது;
"வாய்மை வெல்லும்" எனத் தோய்த்துச் சொல்லியே தொலைந்தன இருந்த
வாயும், கடந்த
நாளும்.
இரத்தத்தின் படிமத்தை இன்னமும் பழகிய தடத்தேயே உரசி நடக்கிறது
பழம் நா,
-'கரைபுரள் ஆறாய் ஓடு வெள்ளம்.'
பூமிக்கைக்குண்டில் வேறொரு முனை
முளைக்கும் வெடிக்க இழுக்கும்
கொழுக்கி.
விதைப்பவரும் அறுப்பவரும் உரத் தறுத்துப் பேரம் பேசப் பேச,
பூமிக்கைக்குண்டில் ஒரு முனை தறித்தும் கணம் தரியாமல்,
வேறெங்கோ முகிழ்க்கும் இருட்கொழுக்கி.
சலியாமல் வாட்ட வெட்ட,
தலை நிலம் துளைத்துத் தழைக்கும்
கோரப்புல்லில்லை,
சரியான மானுடநா.
இதில் நானெதைப் பாட?
அதற்கு என் புதுநாக்கெங்கே போய்த் தேட?
தன் வீட்டுக் கொல்லைப்புறத்தைப்
பற்றியரு சிறுகுறிப்பு எழுதாதவன்,
பிறர் கழியலறைக்குட் குந்தியிருந்து
தன் இல்ல முன்றல்தன் ஒய்யாரம்
பாடுபவன்,
குளிருக்கு மட்டும் நெருப்பு மூட்டி இரவற் சுருட்டு பற்றுபவன்,
மழைக்கொதுங்கு தாழ்வார ஓட்டையால் ஒழுக்கென்று சுட்டுபவன்,
தொடங்கிய புள்ளிக்கே சுழன்று ஒழுக்கிற் திரும்பிய வட்டத்து எருது
-எல்லா வகைக்குள்ளும் தன்னைப் பிறந்திழைத் திறந் திழந்தான்,
இனி எதைப் பாடுவது, எப்படி, எதனால்......
இன்று, என் அரிதட்டின் கண்ணறையில் எதுவுமே தேங்கவில்லை.
நுழைந்து கடந்த பொருளின் மணம் மட்டும் இழை நிலைத்து,
நுகரத் துருத்துகிறது மூக்கு.
தும்மல் வருகின்றது; தெறிக்கின்றது எச்சிற்றுளி.
அகவிதை ஒன்று வேண்டுமென்றால்........,
""புணர்வுக்கும் போருக்கும் எல்லைத் தர்மமில்லை" என்றார் என்னூர்க்
கவிஞரொருவர்"
என்றொரு வரி மட்டுமே எழுதமுடியும் என்னால் இன்று.........
....... என்று நினைக்கின்றேன்.
மேலேதும் வேண்டின், என் நேற்றுமுன்நாள் முழுமோனமே
இதுவரைநாள் என்னால் எழுதப்பட்ட உயர் இரங்கற்பா
என்றெண்ணி நகர்க இவ்விடமிருந்து.
கர்மத்தினைப் பேசி, காலத்தைச் சாடிவிட்டு
ஓடிப்போய் கூடி உறங்குக ஒவ்வொருவரும்
அவரவர் மனையாள் மனையான் மடிகளில்
மடியும்வரை.
ஸத்யமே ஜயதே!
ஸம்போ ஸ்வாமி யுகே யுகே!!
'99 செப்ரெம்பர் 09

0பினà¯à®©à¯à®à¯à®à¯:
Post a Comment
<< Home