12, Aug. '99 - Clearview Mall, New Orleans
சச்சரிக்கும் புறா எச்சத்து கண்ணாடி முகட்டின் கீழ் காத்திருப்பு.
கண் குத்தி நாழிகை தின்னும்,
போகும் பெண்கள் பின்புறங்கள்,
வரும் பெண்கள் மார்பகங்கள்.
உள இருப்பும் உட்கார்ந்த தள இருப்பும் ஒன்றாய்த் திசை பின்ன
வலுப்படுத்தி சிறுபிள்ளையுடன் விரல் அசைக்கும் விளையாட்டு.
நூற்றாண்டுப் 'பஞ்சுக்குவியல் விற்பனை மனிதர்'
டிகாஸ் தூரிகை தோய்தீட்டற்பிரதி விலையில்
பஞ்சு பிய்ந்து பற்றியெரிந்தவிந்து நீறாகும்,
தினப்படி மனிதன் கலையார்வம் பிஞ்சில் வெம்பி.
ஹம்பேகர் மனிதர்கள்;
கோலா வனிதைகள்;
பொம்மைச் சிறுவர்கள்;
'மக்டொனால்ட்ஸ் கொம்போ மீல்' குடும்பங்கள்.
வகைபிரிக்க, இலக்கங்கள் ஒன்றிருந்து ஆறுவரை உங்களுக்கு வழங்கப்படும்.
மிளகும் உப்பும் தக்காளிக்குழம்பும் அவரவர் சுவைக்கு அள்ளிக்
கொட்டவும்.
அடுக்கடுக்காய், தின்ற தட்டங்கள் அழுக்குக்கூடை மேற் படுத்துத்துறங்கும்
முதலைகள்.
தானியம் தின்று திமிர்த்த புறாச்சொண்டு தாளம் தட்டும் கூரையில்;
கோரமாய் இலயம் கெட்டு 'ஜாஸ்' நிறுத்தி 'பியர்' தின்னும்
வழிப்பாடகன்.
அரிசியில் அவள் பெயர் பதிக்கும் அவன்;
அடுத்த மாதம் பிரியக்கூடிய அவள்;
அதுபற்றிக் கவலையற்று, வரும்படிக்குப் அவள் பெயர் அவனுக்காய்ப்
பொறிக்கும் அவர்.
தேவனின் வருகை, தாடிக்காரர் துண்டுப்பதிப்பில்,
தரையிலும் தாவரத்திலும் தாழ்வாரத்திலும்.
கண்ணாடிக்கூரை கொத்திக் களைத்துப்போய் வெண்புறா தடித்த புழுத்தேடும்.
வன்னட்டை நூல்கள் வெண்சுவர் முகம் தெறித்து நிர்ச்சலனித்துத் தூங்கும்;
மென்னட்டைப்பதிப்பு, நுனிக்காது பிடித்து வாங்கிப்போகும் முயல்களாய்த்
தாவும்.
குழந்தை இனிப்புகளைத் தரை கொட்டும்;
பொறுக்கும்; அழும்; அழுக்கும் பொறுக்கும்; அழும்; பொறுக்கும்;
அழுது கொண்டு பொறுக்கும்; அழுக்குப் பொறுக்கிக் கொண்டு அழும்.
சிறிதாய்ச் நேரம் சுற்றும் வட்ட இயக்கம் சேகரிப்புச் செயலென்றாகும்.
வெண்புழு தேடிக் களைத்த புறா, இரை போடும் கை காண
அலையும் இங்குமங்கும்.
இலைகள் பிய்த்துப் போட்ட சாடி மரங்கள்,
பிளாஸ்ரிக் மரங்கள் செடி முழுமை பார்த்தேங்கும்.
தூசு முட்டிமுட்டி மூடினாலும், அகலிகைக்கல்லாய்,
செயற்கைநார்த் தாவரங்கள் கொட்டக் கொட்ட விழித்திருக்கும்.
கட்டிட முற்றத்தே மோனத்தவத்தே
பற்றியெரியும் நெருப்பிலும்
பச்சை கட்டுக்குலையாமல்
இஷ்டமாய்ப் பிடித்திருக்கும் பெரும்தவம்.
காத்திருப்பில் பொறுமை பற்றிப்பிடித்தல் எண்ணி,
கனன்று கனதிப் பொறாமை பற்றியெழும் என் மனத்தே.
இன்னும் உள்ளே,
சட்டைவிலையோடு என் சம்பளம் கழித்துக் கூட்டி
கடைக்கண்ணாடிச்சட்டக்கூட்டுள் மனச்சத்தமிட்டபடி
அவள்.
'99/08/14 சனி

0பினà¯à®©à¯à®à¯à®à¯:
Post a Comment
<< Home