அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

ஒளிக்க முயல்தல்

ஒளிக்க முயன்று கொண்டிருக்கின்றேன்,
என்னை, என் அனுபவங்களிலிருந்து
முன்னைப் போல் இன்றைக்கும்.

என் ஒற்றை அடிக்கு முன்,
இரட்டைப் பட்டுத் தாவித் தெறித்து
முன்னே நிலத்திற் படுக்கும் முள், முன் அனுபவம்
என்பது எப்போதும் மறந்துபோம் எனக்கு.

புதிதாய்த் திகைப்பூண்டு மிதிப்பானைப் போல் துள்ளி நான்.

என்னவாய் இருந்தாலும்,
சொந்த அனுபவங்களை வெறுக்கமுடிவதில்லை என்னால்,
எவரும் திருடிக் கொள்ளமுடியா எனக்குரியவை அவை.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home