தேவைகளின் புலம்பல் அல்லது புலம்பல்களின் தேவை
கிழிப்பதற்கு எதுவுமில்லாமல்
தற்போதைக்கு
என் கைகளைக் கிழித்துக் கொள்கிறேன்.
விரல்கள் தமைத் தாங்கும் உள்ளங்கைச்சுவர்களை
ஒவ்வொன்றாய் உரித்துக் கொள்கின்றன.
வெங்காயத்தோல்களில் உறையும் குருதியும்
எனக்கு எதிரிகளும் இல்லை நண்பர்களும் இல்லை என்ற நேரத்தில்
சொந்தமாய்ப் பொழுதை உடைத்துக்கொள்வதே என் உலகமாகின்றது.
காலத்தின் பயணத்தில் இவை எதுவுமற்றவர்களை
ஏதோ ஒருபுறத்தில் இருத்த முயல்கிறேன்.
இவர்கள் எவருமற்ற வெளியில் இருக்க விழைகின்றது இருப்பு.
சுடத்தெரிந்தும் பதுங்குபவர்களை என்னால் நேசிக்கமுடின்றதில்லை;
தழுவத்தெரிந்தும் சூட்டுச்சன்னத்துக்குப் பதுங்குகின்றவர்களைக் கூட.
நிழற் சதுரங்கத்தளத்தில் இவர்களை எதிர்க்காய்
அரசராய், ராணியாய், குதிரையாய், குருவாய், கோட்டையாய்,
இவர் குரலுக்காய்க் குதித்துக் கொலையுறும் சேனையாய்
நகர்த்திக் கொல்வதிற் கழியும் என் நிகழ்காலம்.
முகமறியாத் தளத்தில் எதிரியும் இல்லை; என்னவனும் இல்லை.
பெயர் முகப்புகளும் பட்டத்துப் பின்வால்களுமே தோரணமாம்.
நிழற்சதுரங்கத்தளம் பரவி, முளைக்கும் எருக்கலை
என் வீட்டுக்குள்ளும் இரவுத்தூக்கத்தில்.
என் பிறப்புத்தேசம் பற்றி,
என் பின்முன் தொங்காத பட்டத்துக்காய்,
எனக்கு முளைக்கா வயதுக்காய்,
எனக்குரித்தானதைப் பிறர்க்கள்ளிக் கொடுத்து
ஒன்றித்து வஞ்சித்த உங்களை,
கொல்வேன்,
ஒவ்வொருவராய்....
ஏதோவோர் விதத்தில்.....
இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள்.
தூக்கங்களிலும் விழித்திருப்பீர்.......
பெருங்கடலுக்கு இப்பாலும் அப்பாலும்....
கடவுளரும் காவலரும்....
பூதங்களும் பரிவாரங்களும்....
பெரியவர்களும் பினாமிகளும்....

0பினà¯à®©à¯à®à¯à®à¯:
Post a Comment
<< Home