அலைஞனின் அலைகள்: கணம்

Tuesday, December 07, 2021

துடிகுறளி

 ஓடுவெள்ளத்தின்கீழான தனிக்கல்லாய்

ஓங்கிவீசுபுயலில் முறியாத சிறுபுல்லாய்

தன்னந்தனியே வான்குத்தி,

தரித்துத் துருத்தி,

நீட்டி நிற்கிறது, நெடுநடுவிரல்!

முடிந்தால், 

புடுங்கிப்பார்,

புழுவே, கூட்டுக்

குழுவாலோ, கூர்

நுனியாலோ!

-என்றதாய்,

இக்கறள்நகம்!


ஓயாது உட்குறண்டும்

ஒரு துடிகுறளி!


12/05/'21 ஞா 00:10 கிநிநே.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home