அலைஞனின் அலைகள்: கணம்

Tuesday, December 07, 2021

செக்கு

 சுப்பரின் கொல்லைக்குட்

சுழலும் மாட்டை என்ன சொல்வேன்?

உட்காரவைத்த

செக்குக்கு ஒன்றும் சொல்லா யான்,

வயிற்றுப்புல்லுக்குச் 

சுற்றும் மாட்டை என் சொல்வேன்?

சுற்றவைத்து எள் அரைக்க இட்டானை

ஏதும் சொல்வேனா? - இல்லை!

இட்டான் இடானென்றால், இல் அடுப்புட்

சுருண்டு தூங்கும் ஏதேனும் நிறப்பூசம்!

எள் விதைத்தானைச் சொல்வேனா என்றால்,

எளியன் அவனுக்கும் இல்லையோ இல்? இல்லாள்

இல்லாததை எட்டாய்ப் புட்டுப் பங்கிட்டுக்

கொடுப்பாளோ உந்தியிருப்பார்க்கு உள்ளிட?


காண்! செக்குக்கு மாடுண்டு;

மாட்டுக்குச் சுற்றவுண்டு புல்

புல்லிட்டானுக்குக்குண்டு சுற்றம்!


ஆக, எள்ளுச் செக்குக்கும் உண்டு

அண்டத்தில் எள்ளமுடியா 

எள்ளிருப்பு உள்!


அழுக்குச்செக்கொரு

செம்மைகொள் கர்ப்பகிரகம்!


நின்று

கணம்

கும்பிட்டுப்போவோம்,

வா!


12/06/'21 தி. 14:29 கிநிநே

0பின்னூடுகை:

Post a Comment

<< Home