வெற்றுப்பவிசு
உரசிக்கொள்ள
நேரம் அகப்படாப்பொழுதில்
இருண்ட அறையில்
ஈரம் வரண்டு
அலையும் காற்று,
காதல்!
தும்பிக்கை
பிணைந்து
நேர்பொருதி,
நெற்றி
நெரிய மோதும்
யானைகள் பிளிறல்,
காதல்!
காதல் என்பது
ஈரம்!
காதல் என்பது
பிளிறல்!
மீதியெல்லாம்,
பாதிக்கண்மூடிப்
பதுங்கித்தூங்கும்
பகட்டுப்பூனைகள்தம்
வெற்றுப்பவிசு!
12/15/'21
பு 23:54 கிநிநே.
0பினà¯à®©à¯à®à¯à®à¯:
Post a Comment
<< Home