மொழியுணர்வு
நண்பர், பாட்டுக்கொரு புலவன் பரணன் என்பார்
கவிதைக்கோல் கோன் கம்பன் கையில் என்றார்
வாய் திறந்தால், வள்ளுவனே அவர் வாழ்த்துச்சொல்லாவான்
'துள்ளி வரும் தமிழ்மொழியே தன்னுயிரின் துடிப்பு' எனல் அவர்
மிடுக்கு.
"எம்மான் மொழிப்பற்று என் கொல்!" என்பார் என்னூரார்.
மெய்யோடு சேர்த்தணைத்த உயிரிணையாள் போட்ட குட்டிக்கு தேடி
இட்டார் பெயர்,
மெய்யோடு உயிர்சேர் தமிழ்ச்சொல்லேதும், சொல்வோர்நா தப்பியும்
முட்டாமற் பார்த்துப்
பார்த்து.
'ஆங்கிலத்தில் எழுதிக்கூட்டு எண் ஐந்தாக, கூடுமாம் குழந்தை
மொழித்திறன்' என்பதவர்
கூற்று.
என் நெஞ்சுக்கு நிம்மதி; இனி அஞ்சல் வேண்டா எண்
ஐந்தழியாதவரை;
காலத்தே கொஞ்சு தமிழ்மொழி வஞ்சகத்தால் துஞ்சித் தொலைந்துபோகாது
துப்பரவாய்.

0பினà¯à®©à¯à®à¯à®à¯:
Post a Comment
<< Home