அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

மனித உரிமை

பகிரங்கமாய் ஒட்டிக் கொள்ளச் சுவர் முத்தம்
தமக்குள் நச்சரித்து, கரித்துத் திட்டும் சத்தம்
வலைச் சிலந்தி முழுதாய் விழுங்கி ஏப்பம்

எடுத்தெறிந்தேன் இலக்குச் சுட்டிச் செருப்பு
கரி அடுப்பினிலே பல்லி அப்பளம் இரண்டு.

தமக்கெனப் பிடித்தங்கள் கொண்டவையைப் பிடிக்காதிருக்க உண்டு தகுதி
எனக்கு.
தன்பாட்டிற் போகும் புற்றெறும்புக்கு வெந்நீர் கொட்டும் வர்க்கம் எனது;
நான் மனிதன்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home