அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

மாட்டுச்சண்டை

மாட்டுச்சண்டை விட்டார் மானுடர்.
தாய்ப்பசு ஈன்ற வேறொரு கன்றுடன் பொருதப் புகும் இளங்காளை.
தம்மிடை கொம்பால் குதித்துக் குதித்துக் குத்தின இரண்டும்.
ஈற்றில் குடல் சரிந்தோடக் குளமாய் இரத்தம்.
மாண்டது ஒன்று; மடி வீங்கி மூச்சு வாங்கிட மற்றொன்று.
"வென்றவன் நான்" என்றான் கொன்றதைக் கொண்ட மனிதன்.
அவன் மாடு புல் மட்டும் தின்று பின்னொரு பொழுது போரிடப்
பிழைத்தது.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home