ஓர் உன்னத மனிதனின் நினைவாக
உண்மை உணர்வுகளுக்குத் தலைப்பில்லை;
உயிர், வெந்துபொங்கு உயிர் மட்டுமே
சே குவேய்ரா!
தோழ,
(நூற்றண்டுகள் முன் தோன்று (நன்)நூல்கள்
வாழ்க்கை வழியமை குருவாய் ஆகையிலே
நான் சந்திக்காமல் மண் சாய்ந்துபோன நீ,
ஒரு நல் நண்பனாக முடியாதா, சொல்?
வாழ்மனத்தூரம் முன் தொலையும்
வசிப்புநி(¨)லத்தூரம், நண்ப)
பொலிவியக்காடொன்றில்,
அறியா விவசாய அடிமைத்தனம்
உழுதமுகங்களுக்காக, உரம்பெறு
கைகள் வெட்டப்பட்டு, வான் நோக்கி,
இளந்தாடியுடன், மெலிந்து
"ஆண்டவரே, ஆண்டவரே, ஏன் என்னைக்கைவிட்டீர்?"
என்று அரற்றாமல், விறைத்து வீழ்ந்திருந்தவனே,
இன்றுபோல், இவர்கள் தாங்கள் என்ன செய்கிறார்கள்
என்று அன்றும் நன்றே அறிந்தே செய்திருந்தார்கள்.
இவர்கள் உன் கைகளை வெட்டிக்கொண்டு
தங்கள் பாவச்சிலுவைகளைத் தூக்கித்
தங்களை அறைந்துகொள்வதில் அளவற்று
அகமும் புறமும் மகிழ்ந்துகொள்கிறார்கள்.
உன்னைப் பற்றித் தெரியாது; ஆனால், என்னால்
மன்னிக்கமுடியவில்லை; நான் தேவனில்லை;
நகமும் மயிரும் நிணமும் நிறமும்கொள் சிறுமனிதன்.
பதுங்கித்தாக்கு ஆயுதப்போராட்ட ஆரம்பகர்த்தாவே,
உனக்கும் தர்மம்போதித்த தவப்புத்தனுக்குமிடையே
பெரும்பொருத்தங்கள் காண்கிறேன், என் போதிமரங்களே;
வாழ்நிலையிற் கீழிருந்து வேறுவழியின்றிச்
சமூகம் சீர்திருத்தத் தேடாமல் வளமிகு
மேல் நிலை தூக்கியெறிந்து போனவர்கள்
பார்மேல் நீங்கள் இருவர் மட்டுமே, நான் புரிந்தளவில்.
நேற்றைய மாதத்தின் நடுமதியப்போதொன்றினில்,
மில்வோக்கி ஏரிக்கரைக் கோடைவிழாவில்,
உன் செந்நட்சத்திரத்தொப்பியுடன்,
உள்ளே இட்ட மது நில்லாமல், வெளி
வாந்தி எடுத்தவண்ணம் இளைஞன் ஒருவன்.
சிலவேளை,
உன்னைக் கொல்லப் பொலிவிய அம்பேவியவரின்
புத்திரனாய், பேரனாய், பெறா வளர்ப்புமகனாய்க்
கூட அவ்வப்பாவி வாலிபன் ஆகலாம்;
ஆனாலும், அகம் கோணி வாடலன்றி அவன்மீது
ஆத்திரப்பட எனக்கேதும் உரிமையில்லை.
கொண்ட மனக் கொள்கை (கை)விட்டு
தன் சொந்த நிலைமைக்காய்
இங்கு ஒண்டிக்கிடக்கும் எனக்கும்
அந்த நாற்றமெடு புளிப்பு வாந்திக்கும்
ஏது வித்தியாசம் உன்னால் காணக்கூடும், என் முன்னோடியே?
பொதுவுடைமை நெல்லைப் புழுக்கள், களைகள்
புடைத்துப் பாராமலே விதைக்கப்போட்டுவிட்டது
உன் தவறில்லாததுபோல், என் பிழையும் இல்லையே.
அ·து அறியாததுதான் உன் உயிர் விலையாய்ப் போயிற்று,
இ·து அறிந்ததுதான் என் உடல்நிலை இங்கென்று ஆயிற்று.
நண்ப,
'காலம் பதில் சொல்லும்' என்று
சொல்லிக் கொண்டிருக்கமட்டும் கஷ்டமற்றபோதும்
எனக்கு, என்னையே ஏமாற்றும் இனிப்புப் பொய்களிலே இஷ்டமில்லை;
எனக்குத் தெரியும், நன்றாகவே, மிக
நன்றாகவே தெரியும், தோழனே,
கொடுமைகள் தாமே அழிவதில்லையென்று; ஆயினும்,
சுயநலம் இட்ட அழுக்குத் தனிப்பெயர் எச்சம் என்னால்,
வினை எச்சம் மட்டுமாயிருத்தலன்றி,
இனி எதை....
.........வீரியங்கொள் வினையாய்
விடிவுதேடுவோர் வேதனைக்காய்,
விலையாய்க் கொடுக்கக் கூடுமென்பாய்?
வெற்றுவெறி மதுப்புட்டிகளில்,
பசப்பும் பாடற்தட்டுகளில்,
கொல்லப்பட்டு உன்
கொள்கைமுகம் காணுகையில்,
அக்கூரிய விழி கோழை சொல்லக்
குதறுண்டு
கதறலன்றி உள்மனம்
செய்தல் வேறேதுமறியேன்.
தனிமரம் தோப்பாகுமா, சிநேகித?
ஏனஸ்ரோ, முதலில் நீ,
பின்னர் அலன் டே;
வழிகாட்டியே, இது விசித்திரம் எனக்கு;
பிற (பிர)தேசங்கள்,
வட புலத்தின் சோகமே
தென் புலம் எனக்காண,
அமெரிக்கக் கண்டம் மட்டுமேன்
மறுதலை சொல்கிறது நிஜமென?
இதன் மேலே,
என்ன தொடர்வதென்றும் அறியேன்;
உன் தியாக முப்பதாண்டுவேளைக்காய்
என்ன சங்கற்பம் புரிதலென்றும் தெரியேன்.
ஒன்று மட்டும் சொல்வேன்,
உனக்கதுனொரு சொட்டு மகிழ்ச்சி தருமானால்;
தாமே திட்டமிட்டுத் தரை
மட்டமாய்த் தகர்த்துவிட்டுத் தம்
பல்கலைக்கழகங்களின்
தத்துவப்பாடத்திட்டத்திற்காய் மட்டும் மாசாய்
முழுக்க விட்டுவைத்திருக்கும் தூசுபடி
சிவப்பு மொத்தப்புத்தகங்களா`ய் மட்டும்
போகவில்லை ஆகியின்னும் சமதர்மம்; நண்ப,
எனக்குள்ளும் சிறிது, அடிச்சட்டிக் கறியாய் ஒட்டிக் கிடக்கிறது,
அன்றிருந்தது போலில்லாதுபோயினும், நான்
அற்றுப்போகும்வரை என் உற்ற உயிர்த்
தோழிபோல உறுதியாய்க்கூட வரும் துளிச்சொட்டு அளவேனும்.
இவ்வுரைப்பு, என் கட்டைவிரல் அல்ல;
எனினும், இன்றைய பொழுதில்,
இதுவே என் குருதட்சணை என்றேற்றுக் கொள்.
இனி, ஏதுவும் நடக்கலாம் எந்நேரத்தும்.
இன்னும் காடுகள் உள்ளன;
மெல்லிய தாடிமுடி வளர்வதாயும்,
செந்நட்சத்திரத்தொப்பியும் கைவசம்- கூடவே,
அவை சேர்க்கத் தார்மீக ஆவேசம் கிளப்ப,
கொடுங்கோன்மையும் பசித்து
நாடு வசித்திருப்பது காண்கிறேன்.
யார் கண்டது?
வெள்ளமோடிப்போய் ஆங்காங்கே
தாம்முளைத்த விதை நாற்றெனத்
தோற்று உரோமத்தாடி முகத்துடன்,
மீள,
வானம் பார்த்து, கைகள் அற்று
இன்னொரு மெல்லிய உடலும்
கிடக்கலாம் உயிர் விறைத்து, ஒரு வனத்தே,
உய(யி)ர்வாழ்நிலை தூக்கியெறிந்து போன,
கபிலவஸ்துக் கௌதமபுத்தனென,
ஆர்ஜன்டீன ஏர்னஸ்டோ குவேய்ராவென;
அன்றைய தினம்,
அநீதியர்தம் அதிதியாய்,
ஆகாயம், அகிலம் எங்கும்நிறை ஆண்டவரே,
மீண்டும் ஒரு முறை, நீர்,
உம் வெட்கமற்ற, கொடுமைக்குப் பல்லக்குத்
தூக்கும் பாவச்செயலுக்காய், உம் மீதே
நாணிப்போக உண்மைக்கும் சித்தமாயிரும்.
உயிர், வெந்துபொங்கு உயிர் மட்டுமே
சே குவேய்ரா!
தோழ,
(நூற்றண்டுகள் முன் தோன்று (நன்)நூல்கள்
வாழ்க்கை வழியமை குருவாய் ஆகையிலே
நான் சந்திக்காமல் மண் சாய்ந்துபோன நீ,
ஒரு நல் நண்பனாக முடியாதா, சொல்?
வாழ்மனத்தூரம் முன் தொலையும்
வசிப்புநி(¨)லத்தூரம், நண்ப)
பொலிவியக்காடொன்றில்,
அறியா விவசாய அடிமைத்தனம்
உழுதமுகங்களுக்காக, உரம்பெறு
கைகள் வெட்டப்பட்டு, வான் நோக்கி,
இளந்தாடியுடன், மெலிந்து
"ஆண்டவரே, ஆண்டவரே, ஏன் என்னைக்கைவிட்டீர்?"
என்று அரற்றாமல், விறைத்து வீழ்ந்திருந்தவனே,
இன்றுபோல், இவர்கள் தாங்கள் என்ன செய்கிறார்கள்
என்று அன்றும் நன்றே அறிந்தே செய்திருந்தார்கள்.
இவர்கள் உன் கைகளை வெட்டிக்கொண்டு
தங்கள் பாவச்சிலுவைகளைத் தூக்கித்
தங்களை அறைந்துகொள்வதில் அளவற்று
அகமும் புறமும் மகிழ்ந்துகொள்கிறார்கள்.
உன்னைப் பற்றித் தெரியாது; ஆனால், என்னால்
மன்னிக்கமுடியவில்லை; நான் தேவனில்லை;
நகமும் மயிரும் நிணமும் நிறமும்கொள் சிறுமனிதன்.
பதுங்கித்தாக்கு ஆயுதப்போராட்ட ஆரம்பகர்த்தாவே,
உனக்கும் தர்மம்போதித்த தவப்புத்தனுக்குமிடையே
பெரும்பொருத்தங்கள் காண்கிறேன், என் போதிமரங்களே;
வாழ்நிலையிற் கீழிருந்து வேறுவழியின்றிச்
சமூகம் சீர்திருத்தத் தேடாமல் வளமிகு
மேல் நிலை தூக்கியெறிந்து போனவர்கள்
பார்மேல் நீங்கள் இருவர் மட்டுமே, நான் புரிந்தளவில்.
நேற்றைய மாதத்தின் நடுமதியப்போதொன்றினில்,
மில்வோக்கி ஏரிக்கரைக் கோடைவிழாவில்,
உன் செந்நட்சத்திரத்தொப்பியுடன்,
உள்ளே இட்ட மது நில்லாமல், வெளி
வாந்தி எடுத்தவண்ணம் இளைஞன் ஒருவன்.
சிலவேளை,
உன்னைக் கொல்லப் பொலிவிய அம்பேவியவரின்
புத்திரனாய், பேரனாய், பெறா வளர்ப்புமகனாய்க்
கூட அவ்வப்பாவி வாலிபன் ஆகலாம்;
ஆனாலும், அகம் கோணி வாடலன்றி அவன்மீது
ஆத்திரப்பட எனக்கேதும் உரிமையில்லை.
கொண்ட மனக் கொள்கை (கை)விட்டு
தன் சொந்த நிலைமைக்காய்
இங்கு ஒண்டிக்கிடக்கும் எனக்கும்
அந்த நாற்றமெடு புளிப்பு வாந்திக்கும்
ஏது வித்தியாசம் உன்னால் காணக்கூடும், என் முன்னோடியே?
பொதுவுடைமை நெல்லைப் புழுக்கள், களைகள்
புடைத்துப் பாராமலே விதைக்கப்போட்டுவிட்டது
உன் தவறில்லாததுபோல், என் பிழையும் இல்லையே.
அ·து அறியாததுதான் உன் உயிர் விலையாய்ப் போயிற்று,
இ·து அறிந்ததுதான் என் உடல்நிலை இங்கென்று ஆயிற்று.
நண்ப,
'காலம் பதில் சொல்லும்' என்று
சொல்லிக் கொண்டிருக்கமட்டும் கஷ்டமற்றபோதும்
எனக்கு, என்னையே ஏமாற்றும் இனிப்புப் பொய்களிலே இஷ்டமில்லை;
எனக்குத் தெரியும், நன்றாகவே, மிக
நன்றாகவே தெரியும், தோழனே,
கொடுமைகள் தாமே அழிவதில்லையென்று; ஆயினும்,
சுயநலம் இட்ட அழுக்குத் தனிப்பெயர் எச்சம் என்னால்,
வினை எச்சம் மட்டுமாயிருத்தலன்றி,
இனி எதை....
.........வீரியங்கொள் வினையாய்
விடிவுதேடுவோர் வேதனைக்காய்,
விலையாய்க் கொடுக்கக் கூடுமென்பாய்?
வெற்றுவெறி மதுப்புட்டிகளில்,
பசப்பும் பாடற்தட்டுகளில்,
கொல்லப்பட்டு உன்
கொள்கைமுகம் காணுகையில்,
அக்கூரிய விழி கோழை சொல்லக்
குதறுண்டு
கதறலன்றி உள்மனம்
செய்தல் வேறேதுமறியேன்.
தனிமரம் தோப்பாகுமா, சிநேகித?
ஏனஸ்ரோ, முதலில் நீ,
பின்னர் அலன் டே;
வழிகாட்டியே, இது விசித்திரம் எனக்கு;
பிற (பிர)தேசங்கள்,
வட புலத்தின் சோகமே
தென் புலம் எனக்காண,
அமெரிக்கக் கண்டம் மட்டுமேன்
மறுதலை சொல்கிறது நிஜமென?
இதன் மேலே,
என்ன தொடர்வதென்றும் அறியேன்;
உன் தியாக முப்பதாண்டுவேளைக்காய்
என்ன சங்கற்பம் புரிதலென்றும் தெரியேன்.
ஒன்று மட்டும் சொல்வேன்,
உனக்கதுனொரு சொட்டு மகிழ்ச்சி தருமானால்;
தாமே திட்டமிட்டுத் தரை
மட்டமாய்த் தகர்த்துவிட்டுத் தம்
பல்கலைக்கழகங்களின்
தத்துவப்பாடத்திட்டத்திற்காய் மட்டும் மாசாய்
முழுக்க விட்டுவைத்திருக்கும் தூசுபடி
சிவப்பு மொத்தப்புத்தகங்களா`ய் மட்டும்
போகவில்லை ஆகியின்னும் சமதர்மம்; நண்ப,
எனக்குள்ளும் சிறிது, அடிச்சட்டிக் கறியாய் ஒட்டிக் கிடக்கிறது,
அன்றிருந்தது போலில்லாதுபோயினும், நான்
அற்றுப்போகும்வரை என் உற்ற உயிர்த்
தோழிபோல உறுதியாய்க்கூட வரும் துளிச்சொட்டு அளவேனும்.
இவ்வுரைப்பு, என் கட்டைவிரல் அல்ல;
எனினும், இன்றைய பொழுதில்,
இதுவே என் குருதட்சணை என்றேற்றுக் கொள்.
இனி, ஏதுவும் நடக்கலாம் எந்நேரத்தும்.
இன்னும் காடுகள் உள்ளன;
மெல்லிய தாடிமுடி வளர்வதாயும்,
செந்நட்சத்திரத்தொப்பியும் கைவசம்- கூடவே,
அவை சேர்க்கத் தார்மீக ஆவேசம் கிளப்ப,
கொடுங்கோன்மையும் பசித்து
நாடு வசித்திருப்பது காண்கிறேன்.
யார் கண்டது?
வெள்ளமோடிப்போய் ஆங்காங்கே
தாம்முளைத்த விதை நாற்றெனத்
தோற்று உரோமத்தாடி முகத்துடன்,
மீள,
வானம் பார்த்து, கைகள் அற்று
இன்னொரு மெல்லிய உடலும்
கிடக்கலாம் உயிர் விறைத்து, ஒரு வனத்தே,
உய(யி)ர்வாழ்நிலை தூக்கியெறிந்து போன,
கபிலவஸ்துக் கௌதமபுத்தனென,
ஆர்ஜன்டீன ஏர்னஸ்டோ குவேய்ராவென;
அன்றைய தினம்,
அநீதியர்தம் அதிதியாய்,
ஆகாயம், அகிலம் எங்கும்நிறை ஆண்டவரே,
மீண்டும் ஒரு முறை, நீர்,
உம் வெட்கமற்ற, கொடுமைக்குப் பல்லக்குத்
தூக்கும் பாவச்செயலுக்காய், உம் மீதே
நாணிப்போக உண்மைக்கும் சித்தமாயிரும்.
0பினà¯à®©à¯à®à¯à®à¯:
Post a Comment
<< Home