சேற்றுவயற்கனவுகள்
அப்பாவிற்கு ஆறுகாணிக் காவல் மொட்டைப்பிள்ளையார் முன்
மூன்று குறுக்கோடிய நெற்றிக்குட்டும் காதிழுப்பும் இட்டுத்தாண்ட
கூப்பிடு தூரத்தில் மூன்று பரப்பு சேற்றுநிலம் இருந்தது,
மாரி பார்த்து சூல் பெருக்கச் சூலகம் விரிக்கும் வட
நிலத்தில், என் நாட்டில்;
அப்பா கண் பொழிய இன்றைக்கும், அது,
என் மண்பிள்ளை, தானியப்பொன்விளையும் பெண்பூமி என்பாராம்,
கால் பட்டுப் புல் செத்த ஒற்றைத்தடமிட்ட உயர் மொட்டை
வரப்பிருந்த எனக்கு,
அதிலூர்ந்த
-உடல் கலப்பை வெட்டவும் வேறாகி உருண்டு உயிர்வாழ்ந்த-
சிதல்மஞ்சள் மண்புழு மட்டுமே இன்னும் கண்ணிருக்கும்.
சூல் காந்தாரிக் கரு பெருக்க நெல்லு விதை
இலாகவக் கைபற்றி விசிறியிட்டுப்போகும் தந்தைக்கு,
ஞாயிறின் நகராநேரம் தின்ன, சிறு மண்-வெட்டி வரப்புக்
கிராப்பு நான் செதுக்கின்,
வாயெல்லாம் வசவு நெல்லுடனே நாறி விசிறிவிழும்.
"தள்ளியிரு நல்லபிள்ளையாய்; தொல்லை தராதே தங்கைக்கு."
இதுகேட்டு எள்ளி நகையிடத் தோன்றாதெனக்கு:
எனக்கும் மதியங்களிற் புசிக்கப் பசிக்கும்;
சிறு தம்பிக்குப் பால்மாவுக்குப் பசிக்கும்;
என் பாடசாலைப் புத்தகவாங்கலுக்கு பணம் பசிக்கும்;
பக்கத்துவீட்டில் யாரும் பெண்பிள்ளை பருவம் கண்டால், பரிசுக்குப்
பசிக்கும்;
இத்தனைக்கும் வெட்கமின்றி தன் மண் பெண்பிள்ளையிடம்
ஆண் எனக்காய், தம்பிக்காய், அவள் நிறைச்சூலிக் கருப்பிறக்க
இரந்திருப்பார் என் அப்பா,
சமையலறைப்பின் தொழுவத்து ஆண் கன்றீன்று முதுகு நக்கி நில்
கொம்புப்பெண்மாதாவிடம்
அம்மா கற(ர)ந்திருத்தல்போலவே.
அம்மாவைப்போல் அப்பாவிற்கும் ஒரு நம்பிக்கை,
தாமற்றபோதும்,
எமை வளர்த்த பசுப்பெண்தாயை, அத்தங்கையை
நாமிருவர் பார்த்திருப்போமென்று.
நம்பிக்கைகள்...
தை பிறக்க சூல் கொண்ட மண்மங்கைக்கு
பால்தந்த முட்டிவயிற்று முட்டு கோமாதாவிற்கு
பொங்கி வளைகாப்பிட்டு நன்றி சொல்லிக் காத்திருந்த
வயற்சேற்றுக்கனவு கமக்காரக்கிழத் தந்தையின் நம்பிக்கைகள்.
செத்துப்போவேன் என்று பயந்த அப்பாவோ
இன்னும் சாகாமாலே மனம் செத்திருக்கிறார் தினத்திற்கும்
அருகிருந்தும் காணாத என்பூமித் சேற்றுக்கருந்தங்கை எண்ணி,
தொலையிருந்து வான் தொட்டு செயற்கைச்சந்திரன் வழிபேசு ஆண்பி
ள்ளைகளெண்ணி.
மண்தங்கை உடலெங்கும் மனமெங்கும்,
நெளிபுழுக்கள் கரும்பாம்பாய் விளைந்தெழுந்து
நச்சுக் கக்கி காக்கி உடை இடையிட்டு நகர,
பதர்நெல் தின்று பெருத்த கோரைப்புற்பற்றைகள்,
குடி பெருத்து வெளித்தள்ளியிருக்கும்
கற்றையாய் முனை தீ வைத்த திரிதாங்கு வீங்கு
பெருவெடிகுண்டுகள்;
எவரையும் பார்த்திருக்க, காத்திருக்க, காலம் காத்திராக் கதியிலே
எமைக் காப்பதே பெரும் பழியாகிப் போனதென விதிக்கலப்பை
வெட்ட, விரட்டியோட்ட,
நிணம் மனம் கசியும் மணம் பழக்கிப்போய், உடலுக்கொவ்வா
நிலம் நெளியும் மண்புழுவாய்
நானும் நாலாண்டு முன்னரே
நாளுக்கு ஒரு சவரம் பண்ண முடிமுள் முகம் வளர்ந்துவிட்ட பால்
குடி மறந்த சிறு தம்பியும்.
மனங்சலித்த சில மத்தியான எமக்கணங்களிலே எனக்கு தோன்றியிருக்கும்,
பிள்ளையார் பக்கத்து நாவல்மரத்தடிப் பகற்தூக்கக்கனவு அவசரத்தே,
அப்பா,
வேகமாய் சேற்றுவயல் விடுத்து வெகுதூர வெறும் வரள்தரையில்
விசிறிப் போட்ட
தன் இனக் கிளை பரவ நல் வழிதரா, உயிர்முனை
முளை செத்த நாற்றாகா இரு பதர் நெல்லு விதைதாமோ
தம்பியும் அண்ணனுமென்று.
-98 மார்ச் 01,ஞாயிறு 01:12 (மத்தியமேற்குநேரம்)

0பினà¯à®©à¯à®à¯à®à¯:
Post a Comment
<< Home