அற்றுப்போனதோர் இளவரசிக்கு
இந்த இலையுதிர் கால ஆரம்பமே
தவறிப்போய் ஓர் இள இலையையும்
கடுமை கொண்டுதிர்த்துப் போயிருக்கிறது.
காலைக் கனவிலின்று உமர்க்கயாம் வந்தெழுப்பி,
"எழுதிச் செல்லும் விதியின் கை
எழுதி எழுதி மேற்செல்லும்;
தொழுது செல்லும் மானுடன் வாழ்வு..."
என்றெடுத்துச் சொல்லிப் போகையிலேயே
நன்றில்லை இன்று நாள் என்றுணர்ந்திருந்தேன்.
ஒரு மழைக்கால மேகமாய்ப்
பொழிந்தற்றுப் போன இளவரசி,
பதினேழு ஆண்டின்முன் கல்யாணப்பவனி போய்க்
கண் நின்ற மென் பஞ்சுத்தேவதைக்கென்றில்லை,
பின், பிஞ்சுக் குழந்தைகளின் வாழ்வுக்கு, வெற்று
அடையாளம் என்றாற்கூட முன் நின்ற அஞ்சுகம் என்றதற்கல்ல,
சில வாரம் முன்னே, அரண்கட்குள்ளெனிலும் அஞ்சாமற் போர்ப்
பூமி போய் வந்த வெண்புறா வடிவிற்கென்றுமன்று,
வெற்று வெறிப் பூமிப்பந்தெங்கோ சமகாலம் வாழ்ந்தற்றுப்
போயிற்ற ஒரு மானிடப்பெண் என்பதற்காய் மட்டும் வரும்
இவ்வார்த்தைகளை என் அஞ்சலி வழங்கல்களாய் ஏற்றுக்கொள்.
கூடி அற்றுப்போன மற்றோர் துயர்க்கும் எடுத்து இசைத்துப் போ.
நின் இள(வரசி) இரத்தம்,
குடிகாரனுக்குப் பொன் வாத்து கிடைத்ததாய்ப் போன,
தகுதியற்றவர்க்குக் கிடைத்த சுதந்திரத்தின் அவலம்
இன்னொரு தடவையும் எல்லோர்க்கும் எடுத்துக்காட்டிப்போயிற்று
தன் கொடுமையின் உடல் சிதை வேட்டைநாய்ப் பல்வரிசை.
இந்த தேவையற்ற செத்துப்போதல்,
சுதந்திரத்திற்குச் சுதந்திரமே சூழ்ச்சியென, மறுமுறைக்கும்
சம்மட்டி அடித்துச் சொல்லிப்போயிற்று என் தலைக்குள் இடியென.
மற்றப்பெண்கள்தம் தனிஉலக வாழ்க்கைக்குட்
தலை நுழைத்துப் பார்த்தது விற்றிருந்து போகிறவர்,
சொந்தப்பெண்டுதனையே இரவில் வாடகைக்கு விட்டுப்
பிழைத்திருப்பவர் நின்று வேறுபட்டுப் போனவர் இல்லை;
இத்துஷ்டர் தொகுதிக்குட் தாமாய் விழுந்து போனார்,
நின் நிழலுக்காய், நிழலாக உனைத் துரத்தி,
உயிர் தொலைத்தபின்னும் அது நிழற்படமெடுத்துப்போன,
-பட்டத்திற்கென வந்து, இளமையிலேயே பட்டுப்போனவளே.
மற்றவரே, மன்னிக்கவேண்டும், என்றும் இவன் பயன்படுத்தா,
ஆயின், இன்றைக்கு வந்து விழும் இவ்விழிவு வார்த்தைக்கு,-
தமைப் பெற்றாளைப் புணர்ந்த புழுப்படு மனிதர்கள்.
உன் இறப்பு,
இத்தகு பத்திரிகைச் சுதந்திர அடக்குமுறைக்கு,
உன் உடலுறங்குபெட்டி மூடிக்கிறுக்கும் ஆணியுடன்,
ஓர் இறுதி உறக்கம் கொடுக்கும் சுதந்திரம் பெற்றுத் தருமேயானால்,
இளவரசி, டயானா,
பெருமிதமாய் மண்ணுறங்கி,
பிறந்தமண்ணுக்கே நிரந்திர உரமாய்ப் போ,
ஒரு சுதந்திரப் பெண் பறவையின் பெருமை சேர்த்திருந்து.
அடுத்த பிறவிக்கு இன்னமும் ஆசைப்பட்டால்,
அப்படி ஒன்றிருந்தால்,
அதுவும் பெண்ணென்றால்,
உனக்கு இளவரசி முகம் இனி என்றைக்கும் வேண்டாம், பெண்ணே;
ஆபிரிக்க, ஆசிய, அமேஸன் நதிப்புற அமெரிக்கக்
குடிசையன்றுக்குள் கொண்டவன், குழந்தை,
மறு நாள் தின் கவலை, பெண்ணடிமை கொண்டு போராடு
ஒரு சாதாரணப் பெண் என்றாகிப் போ;
அ·து எத்தனையோ மேல், நீ இத்தனைக்கும் கண்டதற்கு.
சிலைகளிலும் சிலுவையிலும் திசைகளிலும் சுவர்களிலும்
எழுந்திருக்கும் ஆண்டவனில் நம்பிக்கை இன்றைக்கு எனக்கில்லை;
என்றாலும்,
எனையரு,
நித்திரைக்குப் போகையிலும்
பின் நிழலுக்காய் நித்தியத்திற்கும் துரத்தத்தேவையில்லா
சொந்த சுதந்திரம் கொட்டி நிறை சாமான்ய
மானுடனாய்ப் படைத்துப் போனதொரு
அற்புத இயற்கையே, அன்புகொள் பெரும் சக்தியே,
ஏற்றுக்கொள் உன் குழந்தை என்னிடமிருந்து,
மீண்டும் உனக்கோர் உரத்த நன்றிதனை.

0பினà¯à®©à¯à®à¯à®à¯:
Post a Comment
<< Home