ஹிம்பவணி ஹ¤ண்டு
ஹிம்பவணி ஹ¤ண்டு செத்துப்போனான்;
மூர்க்கமாய் மூசும் மூக்குமுனை,
புதுவெள்ளைத்தோலின் ஒவ்வாமணம்
காற்றில் சுவாசிக்கத் தான் மறுக்க,
கலகாரிக்காட்டுப் பற்றை மறைவொன்றில்,
ஒற்றை வரிக்குதிரை வயிறேறி மிதித்துப்போக
கூற்றுவன் துப்பாக்கிக் குண்டுக்கு விட்டுப்போனான்
கறுப்பு உயிர்,
ஆபிரிக்கக்காட்டுப்புத்திரன் ஹிம்பவணி ஹ¤ண்டு,
இரத்தமற்றுப்போய்.
மூன்று மூர்க்கச்சிங்கங்கள் முழுதாய் வெறும் கரும்கரம் பற்றி
வாய்கிழித்துக் கொன்றவன்,
வாய்பிளந்து செத்துப்போனான் வெறு வானம் பார்த்து விழி
நிலைத்து, தன் காட்டை
வந்தோர்கள் முழுதாய்ச் சுட்டுத் தின்றிருத்தல் மறுத்துக் கேட்க.
முன்னை நூற்றாண்டே
வெற்று வீதிநாயெனச் சுட்டுச் செத்தவன்
வாழ்ந்திருந்தான் வார்த்தைகளில் நாடோடிப்பாட்டுக் காவியநாயகனாய்.
பின்னே வரு ஆண்டில் பெரிதாயும் விரிந்து பரந்தான்
இல்லாத பலமும் சேர்த்து பின் வந்த அவன் நில,
எழுச்சிகொள் முகமறியாப் போராளி மனதுகளில்.
அவை எல்லாம் கடந்து,
வெள்ளைத்தோல் விலகி வெளிப்போக,
கரு மனதுகளிலும் கலைந்து கரைந்துபோனான், ஹ¤ண்டு
புதுத் தலைநகரில் முன் கால் எழு குதிரையில் அமர்ந்திருக்கும்
கரும்பறவை வெண் எச்சமிடும் ஒரு சிலையென மட்டும்
மழை நனைந்திருந்து.
பின்னை இன்று எழுச்சி பெற்றான்;
பிரபல்யங்கள் அவன் பிரசித்தங்கள் பேசி நின்றார்.
சின்னக் கவிராயர்கள் சில சில்லறைக்கவி விற்றுவைத்தார்.
புதிய கருவறைப் பிள்ளைகள் அவன் பெயர் பெற்றார்.
குதிரை, வாள் போட்டிகள் அவன் பெயர்சொல்ல நடந்து,
நகர்ந்தனர் வீரர் ஹ¤ண்டு பெயர் சொல்லும் பரிசு
தாமெடுத்து.
"என்ன விந்தை?"
-செத்து அலைந்த ஹ¤ண்டும் விந்தையில் மீளப் பேயாயும்
செத்தான்,
"என்ன விந்தை? இத்தனைக்குமா நன்றி கொண்டிருப்பார் என்
மக்கள்?
இடையில் எனை மறந்ததற்காய் அவரைத் திட்டிய என்
புத்தியை
தட்டி வைக்கவேண்டும் ஒரு காட்டுக் கோடரிப்பிடி அடிமுட்டியினால்."
நன்றியில் முழந்தாளிட்டு முழுநீளத்தோத்திரம் கூடச் சொன்னான்
தன் மூதாதைகள் ஆவிகளுக்கு ஹிம்பவணி ஹ¤ண்டு.
பிதாவே, இவன் தான் என்ன செய்கிறான் என்று இன்றளவும்
அறிந்திருந்தானில்லை; எனவே,
இவனை மன்னித்தருளும்.
இவனுக்கு, இன்றைக்கும் தன் பெயர் சொல்லி ஒரு
வண்ணச் சிறுவர் கேலிச் சித்திரப்படம் இன்னொரு கண்டத்தில்
எடுத்திருந்தது தெரிந்தில்லை.
ஆதலினால், இவனை மன்னித்தருளும்.
இன்னுமும் எத்தனையோ நாடோடி வீரர்கள்
எல்லா நாட்டிலும் வாழ்ந்திருந்தார்.
அவர்தம் பெயர் சொல்லியும்
எடுக்கவையும் ஹொலிவுட் இன்னும் எத்தனையோ படங்கள்.
நன்றிகள் உமக்கு உரித்தாகுக.
ஆமென்.

0பினà¯à®©à¯à®à¯à®à¯:
Post a Comment
<< Home