இக்கணத்து எரிச்சல்கள்
அத்தனை நாள்தனைப் போலவே
இக்கணத்திற்கும் எனக்கென மிச்சமென்றிருக்கும்
பிய்த்தெடுக்கும் எரிச்சல்கள் சில;
பின்னர் என்ன சொல்ல?
பாருங்கள் நீங்களே பட்டியலைச் சற்றெடுத்துவிட நான்.
காலை எழுந்து காரற்றுக் கால்மேலே கால் வைத்துக் கடைக்குப்
போய்
காய்கறி வாங்கி வரவேண்டுமெனக் கதை சொல்ல,
காணாது போனான் அறை நண்பன்;
காரணம், நேற்றிரவு கணிப்பொறியில் மூன்றோடு ஐந்து கூட்டி
எட்டென்று
ஞாபகத்தே இட்டுவைத்தது இன்று காலை பத்து எட்டுக்கே
கல்கூடக்கணினியிற் சரியெனக் கண்டறிந்தே ஆனாற்றான்
இன்றிரவு தூக்கமாம் தொலைவானுக்கு.
சரிபோவென்று தனியே காசு விட்டு கழுத்துத் தூக்கெனத் தூக்கி
தோள்வைத்து வீடு வந்து தோலுரித்துச் சமைத்துவைத்தால்,
தின்று முடித்தபின் உப்புக்கு உருளை தொகை பத்தாது என்று
செப்பி
சட்டி அடியே சற்றுவிட்டுச் சென்றான்; அக்கறையோ என்மீது?
இல்லை ஐயா; அத்தனையும் தின்றால் அவனல்லோ எலுமிச்சை
மணம் பரப்பு பாயமிட்டு சருவச் சருமம் கரி கழுவிப்போக்க
வேண்டும்.
என்னைப் பித்தனாக்கிப் போனான் சிறு பொடியன் புது(ப்)
பெண்கள் உரு
அட்டையிடு புத்தகம் படிக்க, பெரிதாய்ச் சத்தம் கொடுக்குமொரு
'ரப்' பாட்டெடுத்து.
போகட்டும்; ஆறுதலுக்கு அம்மாக்கு ஓ என்றழுது
தொலைபேச வந்தது தொல்லை.
சாப்பிட்டாயோ? சட்டைதோய்த்துப்போட்டாயோ?
படித்தாயோ? ஒழுங்காய் இரவு படுத்தாயோ?
குளித்தாயோ? குரலெடுத்துச் சம்பந்தர் பதிகம் இசைத்தாயோ?
ஐயோ!! ஆரிடம் சொல்வேன்?
ஆர்க்கெடுத்துரைப்பேன் அன்னைதன் இவ்வோயா வாய்க்கேள்வி?
அரை நிமிடம் ஐம்பத்தைந்து ரூபா விட்டு நானெடுத்தால்,
போன ஐந்து வருட நாளுக்கும் மாறா
அஞ்சல் வழிக் கல்வி இன்றைக்கும் தொலைபேசி.
ஆரிவை கேட்க எடுத்தார் அவளுக்கு
செயற்கைச் சந்திரனூடு ஒலிதெறித்துக் குரல் பரப்பி?
போச்சு!!! இனி,
அரிசிமில் பரத்தாரின் மூத்தது பரிமளமும் என் வகுப்பு
பாக்கியநாதனும்
ஊருக்கும் தெரியாமல் ஓடி ஒரு தாலி கட்டிய சேதிக்கெல்லாம்
வழமைக்கும் பத்துமாதம் விட்டு பரிமளத்தின் பிள்ளைப்பேற்றுக்கு
ப வரிசையிலே பூராடநட்சத்திரத்திரப் பெட்டைப்பிள்ளைக்குப்
புதுசாய் இட்டு வைக்க ஒரு நல்ல பெயர்கேட்டு பாக்கியத்தான்
எனக்கோர் ஒற்றைவரிக்கடதாசி உறை எச்சிலிட்டு
ஒட்டிவைக்கக் காத்திருக்கத்தான் ஊர் விபரம் ஒட்ட வெளிக்கும்.
போ இதுவும் என்றிட்டு வந்து கணினி கண் திறந்தால்,
போச்சுடா! போச்சே போச்சு மூச்சற்றுப்போதற்கு!!!
நான் நாயென்று நாலு நாட்களுக்கு முன் சொல்லிவைத்ததெதையோ
நாட்காலத்தே தம் மூளையிலே ஊரும் ஒட்டுச் சிந்தனை ஊட்டி
வளர்த்து விட்டு,
வாய் அகட்டி, கால் பரப்பி, பல் தீட்டி
நரியென்று நீர் இட்டுவைத்த காரணம் ஏதெனக் கேட்டுக்
மல்லுக்கு வரிசைக்குப் பொல்லுப்பிடித்துப் புது ஆட்கள்.
நாய்மூலம் நரிமூலம் என் வாய்மூலம் தமிழ் எழுத்து வரிமூலம்
ஓயாத எண்ணப்பரிமூலம் எடுத்துவைத்து
பரியை நரியாக்கியதும் நானல்ல
அதற்காய், பொய்யாய் நரியைப் பரியாக்கிடவும் நமக்கிஷ்டமல்ல
என்று காய்தல் அகற்றி உவப்பேற்ற கஷ்டப்பட்டுப் போனதெல்லாம்
என் எரிச்சல் ஒப்பாரிப் பட்டியலுள் மேற்கிடக்கும்;
ஏய்! எவனப்பா கூப்பிட்டான் இப்போது,
எனை 'முட்டாளே, மோசக்காரா' என்று
மனாக்கு மாநிலத்தே மாறாப்பெருமை சேர்த்து?
ஓய், நீரா?
ஏதப்பா விடயம்?
என் எரிச்சல் இங்கெழுதிச் சொல்வதெல்லாம்
உமக்குள்ள எரிச்சல் இன்னும் ஏற்றிப்போகுதென்றோ?
இப்படித்தான் நண்பனுக்கு நற்தாய்க்கும்
கணினிக்குட் கடிதம் தந்த கனவான்கட்கும்
கண்டிருக்குமோ என் செயல் அவர் மனத்தே?
நல்லது.
இவ்விடத்தில் நான் விடுவேன் என் பொல்லாதோர்
இற்றைக் கண ஒப்பில்லா ஒப்பாரிப் பட்டியல் புட்டுவைக்கும் பணி.

0பினà¯à®©à¯à®à¯à®à¯:
Post a Comment
<< Home