எனது வினாக்கள்
எனது வினாக்கள்
உணர்ச்சிகளிற் பிறக்கின்றன.
ஆனால்,
என் விடைகளின் தேடுதல்,
அறிவின் தர்க்கங்களின் தளங்களிற்
விழுந்து கிடந்து கிடைக்கின்றன.
நாளை விடியலுக்கு
மனிதனாக நான் எழ
உணர்வுக்குதம்பலுடன்
குழம்பிப்போய்
இன்றைய கேள்விகளுடன்
எனது இரவுகள் தூங்கும்.
காலைப் பொழுதுகளில்,
அறிவின் தடயம் பின்னால்,
என் பொடி நடை,
நெடும்பயணத்தினை
விட்ட இடத்திலிருந்து...
...தெரியாத ஒன்றை,
பலதைத் தேடி.
ஒரு கழைக்கூத்தாடியின்
கவனத்துடனும்
கோணங்கித்தனத்துடனும்
எனது பயணங்கள்.
தூக்கம் குலைக்கும்
அர்த்தஜாமப்பொழுதுகள் மட்டும்
உணர்வுக்கும் அறிவுக்கும்
மல்யுத்தம் அறிவிக்கும்.
இரண்டில்,
எதை விட்டுக்கொடுத்தாலும்
தான் தொலைவேன்,
என்று இடைப்பட்டு
நசுங்கும் என் மானுடம்.
எனது உணர்வுகளின்
உணவு சக மனிதர் மனம்.
எனது அறிவின்
தீர்த்தம் எனது செயல் மனம்.
பார்ப்போர் திசையிருந்து,
ஒட்டுச்சட்டைக்
கழைக்கூத்தாடி
நாட்டியம்,
செயல் மாறும்;
பொருள் மாறும்.
ஆனால்,
கூத்தாடி மட்டும் அறிவான்,
தன்
கேள்விகட்கும்
பதில்கட்கும்
இடைச் செருகி
தான்,
வேல்,
அலகு, முதுகு
குத்திச் செதிற் காவடி
ஆட்டம் போடுவதை.
கோணங்கித்தனம் பண்ணவும்
ஒரு கவனம் வேண்டும்;
கலை வேண்டும்.
மனிதனாய் வாழ்வதற்கும்,
உணர்வு வினாவாக உதிக்க வேண்டும்;
அறிவு விடையாய் உதிர வேண்டும்.
அல்லது,
அறைந்து முரசிடுங்கள்,
இங்கு,
ஒரு சடம் மட்டும்
நடந்து
இருக்கின்றதென்று.
உணர்ச்சிகளிற் பிறக்கின்றன.
ஆனால்,
என் விடைகளின் தேடுதல்,
அறிவின் தர்க்கங்களின் தளங்களிற்
விழுந்து கிடந்து கிடைக்கின்றன.
நாளை விடியலுக்கு
மனிதனாக நான் எழ
உணர்வுக்குதம்பலுடன்
குழம்பிப்போய்
இன்றைய கேள்விகளுடன்
எனது இரவுகள் தூங்கும்.
காலைப் பொழுதுகளில்,
அறிவின் தடயம் பின்னால்,
என் பொடி நடை,
நெடும்பயணத்தினை
விட்ட இடத்திலிருந்து...
...தெரியாத ஒன்றை,
பலதைத் தேடி.
ஒரு கழைக்கூத்தாடியின்
கவனத்துடனும்
கோணங்கித்தனத்துடனும்
எனது பயணங்கள்.
தூக்கம் குலைக்கும்
அர்த்தஜாமப்பொழுதுகள் மட்டும்
உணர்வுக்கும் அறிவுக்கும்
மல்யுத்தம் அறிவிக்கும்.
இரண்டில்,
எதை விட்டுக்கொடுத்தாலும்
தான் தொலைவேன்,
என்று இடைப்பட்டு
நசுங்கும் என் மானுடம்.
எனது உணர்வுகளின்
உணவு சக மனிதர் மனம்.
எனது அறிவின்
தீர்த்தம் எனது செயல் மனம்.
பார்ப்போர் திசையிருந்து,
ஒட்டுச்சட்டைக்
கழைக்கூத்தாடி
நாட்டியம்,
செயல் மாறும்;
பொருள் மாறும்.
ஆனால்,
கூத்தாடி மட்டும் அறிவான்,
தன்
கேள்விகட்கும்
பதில்கட்கும்
இடைச் செருகி
தான்,
வேல்,
அலகு, முதுகு
குத்திச் செதிற் காவடி
ஆட்டம் போடுவதை.
கோணங்கித்தனம் பண்ணவும்
ஒரு கவனம் வேண்டும்;
கலை வேண்டும்.
மனிதனாய் வாழ்வதற்கும்,
உணர்வு வினாவாக உதிக்க வேண்டும்;
அறிவு விடையாய் உதிர வேண்டும்.
அல்லது,
அறைந்து முரசிடுங்கள்,
இங்கு,
ஒரு சடம் மட்டும்
நடந்து
இருக்கின்றதென்று.
0பினà¯à®©à¯à®à¯à®à¯:
Post a Comment
<< Home