அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

இருப்பு

சிலநாட்கள் தொலைந்திருந்தேன்.
காலை-எழுந்தேன்,
உண்மை(யாகவும் இருக்கலாம்).
உண்ணல், உடுத்தல், உலாவல்,
எல்லாம், எல்லாமே உண்மை(யென்றே நினைக்கிறேன்).
எனினும்,
முகில் நன்னிய
பின்னைய இரவுப்பிறை கண்டிலேன்.
இளம்பெண்ணென
முன்னே என் முகம் முத்தமிட்டு,
பின்னே வந்தவனையும் தழுவிப்
புறம்பேசிச் சென்றதாம் காற்று.
அன்றைய கனவொன்றில் இன்றைய நிகழ்வெ(¡)ன்று,
காலம் கல(ட)ந்து, வருவது போனதிற் புணர்ந்து,
நிகழ்வது அவற்றுள் ஆழப்புதைந்து.......
.....பின்,
இன்றொரு காலை எழுந்து,
மீள, என்வசம் என்னைத் தந்து,
"நல்லது, செல் நண்ப" என,
கண்ணது நிலம் கண்டு(ம்),
சின்னதாய்த்
தொலைந்திருந்த
ஞாபகம்.

- 94ன் ஒரு மழைத்தூற்று மாலை உணர்வு

0பின்னூடுகை:

Post a Comment

<< Home