இயற்கையின் குரூரம்
என்னைப் பார்த்து
இயற்கை சிரிக்கிறது;
சிறுமல்லிப் பூவாகச் சிலநேரம்,
உள்ளிருக்கும் செந்தீப்பொறி தெறிக்கப் பலநேரம்.
மெல்லிதழாற் தொட்டாலோ
மேனியெல்லாம் சுட்டாலோ
எப்படி சுவைத்தாலும்
இயற்கை எப்போதும்
என்னைப் பார்த்துச்
சிரிக்கிறது.
முன்னைப் பொழுதுகளிற்
பலமுறை அதனுடன்
முண்டித்துப்பாத்திருக்கிறேன்.
முன்னே முழங்காலிட்டு
முனங்குவதாய்க் குனிந்திருக்கும்;
பின்னால், போ என்று நான் விட்டுத் திரும்ப
பேயாய் எழும்; முறைக்காமலே
தன் என்றைப் பொழுதுக்குமான
சிரிப்பினைத் துப்பிக் கடிக்கும்.
முறிவேன் நான்,
மனமும் சருகாகி.
பலவேளை என் கைக்கிட்டே
பழமும் பலமும் கொண்டு நிற்கும்,
"தாம்பூலம் இட்டுக் கிட; சாமரம்
உன் தேகம் சாய்மானக்கட்டில்
நான் வீசி நிற்றலுக்கே பிறந்திருப்பேன்"
என்று சொல்லி.
பின், என் கண் கனவில் மயங்க,
கழுத்தைச் சுற்றிக் கருநாகக்கொடி படர்த்தும்;
அப்போதும் இயற்கை சிரிக்கும்;
வெள்ளை மல்லிப்பூ வாசனை அற்றபோதும்,
மெதுவாக, நஞ்சு சுற்றி மணக்கும்
என் உடற் சுவர் சுற்றி.
ஆனால், இப்போது
இயற்கை வெல்லக் கற்றுக் கொண்டேன்
வெகு இலகுவாக;
அது முடங்கி முழந்தாளிட்டு,
பின்னெழுந்து குதித்துச் சிரித்தாலும்
நான் முகம் மாற்றாமல்,
கடைவாய் இரத்தம் வடிகையிலும்
முன் காட்டிய காதற்புன்முறுவல்
முன் நிறுத்தி.
இப்போது,
இயற்கைக்குத் தன் எந்தக் குரூரச் சிரிப்பும்
என்னிடத்தில் வாய்ப்பதில்லை
என்று ஒரு சின்ன வருத்தம்.
எனக்கென்ன?
நான் இருக்கும்நாள்
என்றைக்கும்
இப்படியே சிரித்திருப்பேன்.
எனக்கே வெற்றி.
'98 புரட்டாதி 03, வியாழன் 19:43 CST
இயற்கை சிரிக்கிறது;
சிறுமல்லிப் பூவாகச் சிலநேரம்,
உள்ளிருக்கும் செந்தீப்பொறி தெறிக்கப் பலநேரம்.
மெல்லிதழாற் தொட்டாலோ
மேனியெல்லாம் சுட்டாலோ
எப்படி சுவைத்தாலும்
இயற்கை எப்போதும்
என்னைப் பார்த்துச்
சிரிக்கிறது.
முன்னைப் பொழுதுகளிற்
பலமுறை அதனுடன்
முண்டித்துப்பாத்திருக்கிறேன்.
முன்னே முழங்காலிட்டு
முனங்குவதாய்க் குனிந்திருக்கும்;
பின்னால், போ என்று நான் விட்டுத் திரும்ப
பேயாய் எழும்; முறைக்காமலே
தன் என்றைப் பொழுதுக்குமான
சிரிப்பினைத் துப்பிக் கடிக்கும்.
முறிவேன் நான்,
மனமும் சருகாகி.
பலவேளை என் கைக்கிட்டே
பழமும் பலமும் கொண்டு நிற்கும்,
"தாம்பூலம் இட்டுக் கிட; சாமரம்
உன் தேகம் சாய்மானக்கட்டில்
நான் வீசி நிற்றலுக்கே பிறந்திருப்பேன்"
என்று சொல்லி.
பின், என் கண் கனவில் மயங்க,
கழுத்தைச் சுற்றிக் கருநாகக்கொடி படர்த்தும்;
அப்போதும் இயற்கை சிரிக்கும்;
வெள்ளை மல்லிப்பூ வாசனை அற்றபோதும்,
மெதுவாக, நஞ்சு சுற்றி மணக்கும்
என் உடற் சுவர் சுற்றி.
ஆனால், இப்போது
இயற்கை வெல்லக் கற்றுக் கொண்டேன்
வெகு இலகுவாக;
அது முடங்கி முழந்தாளிட்டு,
பின்னெழுந்து குதித்துச் சிரித்தாலும்
நான் முகம் மாற்றாமல்,
கடைவாய் இரத்தம் வடிகையிலும்
முன் காட்டிய காதற்புன்முறுவல்
முன் நிறுத்தி.
இப்போது,
இயற்கைக்குத் தன் எந்தக் குரூரச் சிரிப்பும்
என்னிடத்தில் வாய்ப்பதில்லை
என்று ஒரு சின்ன வருத்தம்.
எனக்கென்ன?
நான் இருக்கும்நாள்
என்றைக்கும்
இப்படியே சிரித்திருப்பேன்.
எனக்கே வெற்றி.
'98 புரட்டாதி 03, வியாழன் 19:43 CST
0பினà¯à®©à¯à®à¯à®à¯:
Post a Comment
<< Home