சும்மா...
வினாக்களுக்குட் புதிதாய் கேள்விகள் எழுந்தன:
"காலம்தோறும் தாங்கள் மட்டுமேன்
வினாக்களாகவே விளைந்து கிடக்கவேண்டும்?" என்று.
இந்தத் தடவை எந்தவிடைகளுக்குமே
தாங்களும் ஏன் வினாவடிவம் ஆகிப்போனோம்
என்ற விபரம் வெளிச்சப்படவில்லை
என்று கேள்வி.
------- ********** ----------- ************ -------------
கோயிற்குருக்களைப்போலவே
ஆண்டவருக்கும் அவர் அம்மணிக்கும்
வெறும் கற்சிலையாய் நிற்பதுதான்
மனதுக்கு இஷ்டம் என்று தெரிகிறது.
அசையா அலங்கார அருள்நடனச்சிலை மட்டும்
ஆண்டாண்டாய் ஆடுகிற பாதம் சோர்வினிலே
ஓர்முறை ஊன்றிக் கீழ்வைக்க உயிர்பெற்றால்,
முன்னவருக்கு வேலையில்லாத் திண்டாட்டம்.
பின்னவருக்கு வேலைவந்த திண்டாட்டம்.
------- ********** ----------- ************ -------------
அனுமாருக்கு ஆரோ அநியாய ஆசை காட்டிவிட்டார்கள்
என்று ஆகாசத்திற் கேள்வி.
அக்னிப்பரீட்சைக்காக
அன்னையை மீட்க
அக்னியாகத்திற்கு
இலங்கை போக
அடுத்த அவதாரத்துக்கு
பாதுகாப்புக்கு
வெறுநீள்வால் போதாது,
கூர்குதறுவாளும் வேண்டும் என்று
வீண்வம்புக்கு நிற்பதனால்,
ஆண்டவனே அச்சப்பட்டுக்
காலவரையின்றி
கல்கி அவதாரத்தைக்
கிடப்பிற் போட்டுக்
கருணை வழங்கலைக்
கண்டவர்க்கெல்லாம்
குறுநிலக் குத்தகைக்கு விட்டு
கடலில் ஒளித்துக் கிடக்கிறார்
என்று ஆகாசத்தில் ஓர் அசரீரி.

0பினà¯à®©à¯à®à¯à®à¯:
Post a Comment
<< Home