அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

கடலோரத் தயிர்ச்சோறும் மலைச்சாரல் உருளைக்கிழங்கும்

வங்காளவிரி கடற்காற்றுக்கு ஏங்கி
இந்த மலை இடயாகோவில் இருந்து உருளைக்கிழங்கு அவித்துண்டு
கவி எழுதி என்ன பயன்?
ஒன்று
உணவுக்கு உப்பிட்ட உருளைக்கிழங்கு வேண்டும்
பெரும் வியாபார ஒப்பந்தம் செய்யும் கல்விக்கு
கணினியில் மன்கட்டன் பங்குச்சந்தை நீலச்சிம்புச்சரக்கு கணக்கிடும்
தெம்புக்கு
அல்லது
வெறும் காற்றும் முற்ற நாற்சார்சீமை ஓட்டு வீட்டு முன்னால்
அப்பாவின் சிறு மளிகைக் கடைக்கடைக் கணக்குப் புத்தக்கத்தில்
மனதாற் கைவிரல் கூட்டி தயிர்ச்சோற்றோடு கணக்கிட வலிமை
வேண்டும்.
இரண்டையும் கொண்டுவா என்றால் எங்கே போவது
என்னைப் போல இக்கால இளைஞன்?
இங்கே இருந்தால்,
அந்த உப்பங்கழிப்புளிக்காற்றும் ஊறுகாயும் தலைக்குள் சந்தை பங்கிடுகிறது;
அங்கே போனால்,
இந்த உப்பு உருளைக்கிழங்கும் நீலச்சிம்பும் அம்மாவின் சோற்று
உலைக்குள் கனல்கிறது.
எப்படியும் திருப்தி,
நான் இங்கிருந்து அங்கு விமானம் ஏற
அது அங்கிருந்து இங்கு அடுத்த விமானம் பிடிக்கத்தான் போகிறது;
அங்கிருந்து விமானம் இங்கேற முதல் விமானமே
இங்கிருந்து அங்கேறிப் போய்விட்டிருக்கும்;
ஆக, அதனால்,
அதை விமானப் பயணங்களில் மட்டும்
எங்கோ உப்பற்ற விமான உருளைக்கிழங்குடனும்
காற்றற்ற காற்றோடோட்டத்துடனும்
சந்திக்கிறேன் என்பது மட்டும் உணர்கிறேன்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home