அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

கடலைவியாபாரிகள்

காணாமற்போயிருத்தல் இன்பம்.
கடலைவியாபாரிக் கனவான்களின் விற்பனை, வரி நிலுவைகள் காதில்
விழுந்தாலும்
காணாததுபோல, பூனை கண்மூடிப் பால்குடிப்பது போலிங்கு,
தூரத்தே எட்டியிருந்து
பொய்த்தூக்கத்தே காணாமற்போயிருத்தல் இன்பம் மனதுக்கு.
கடலைவகைகள் காணாதார்,
சொத்தைக்கடலை அவியும் வீட்டார்,
நல்லகடலை அறியாதார் வீட்டார் வாங்கிப்போகட்டும்.
ஆனால்,
பிறர் சொல்லித்தான் இது கடலை என்று அறியத்தேவையில்லா,
பிறர் கடலை என்று சொல்வதெல்லாம் கடலை
என்று எண்ணி வாய் பிளக்கத்தேவையில்லா
கடலைத்தோட்டக்காரர்களுக்குக் கடலை விற்கப்பார்க்காதீர்.
கைதட்டு முட்டாள்கள் மொத்தத்தில் முன் நிற்கிறார்கள்;
கடலைவியாபாரக் கைங்கரிய அனுபவம் + பயிரிட்ட பக்குவம்
பாந்தமாய்ச் சொல்லி
முகம் மூஞ்சி பார்க்காமலே கொறிகடலை வறுக்க
விற்றுவையும்.

பயனாக நற்கடலை பயிரிட்டு,
அது அறுவடைக்கு வரும் நாள்வரையில்
இந்தக்கடலை மொத்த வியாபாரம்,
வெளி முற்றத்தில் மெத்தைபோட்டுப் படுத்திருந்து
பார்த்துப் பரிகசித்துச் சிரித்திருக்கலாம்
கடலைத்தோட்டம் இட்டார் சிலர்
பிறர் கண்ணிருந்து காணாமற்போயிருந்து.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home