அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

பாரியபிரச்சனை

சில நாளாய் நொண்டி மாட்டுக்கெல்லாம் பழம் புண்ணாக்கு விற்பது
பற்றிச்
சீரிய ஆழ் சிந்தனை தலைக்குள்,
இறாத்தல் கணக்கா, படிக்கணக்கா, கிலோக்கணக்கா என்று.
அதற்கு முன்னால்,
மாலைச் சாப்பாட்டிற்குப் பின் பல் விளக்குவதா,
வாசனைக் கிருமிகொல்லி கொழ கொழத்துக் கொப்பளிப்பதா,
எல்லாம் விட்டு வெறுமனே தென்னோலை ஈர்க்கில் ஒன்று எடுத்து
நாக்கு கோலி வார்ந்து பல் குடைந்து கிண்டிப்போவதா
என்ற விவாதம் தலை விறைக்கக் கிண்டிக் கொண்டிருந்ததே?
அதற்கு விடை காணுமுன் இதற்கென்ன தேவை இப்போது?
என்றெவரும் சுட்டிச்சொன்னால்,
அதையும் மறுப்பதற்கில்லை என் மனம்.
ஆனால், எல்லா நாளுமா ஓர் ஒல்லி ஒற்றைச் சொத்தி மனிதன்
எல்லோருக்காகவும் எல்லாப்பிரச்சனையையும் ஆய்ந்திருக்க முடியும்
தன் சொந்த மனவீட்டுப்பிரச்சனை விட்டு?
அதுதான் போகட்டும்;
பழைய பிரச்சனைகளையே எல்லோரும் மணக்க மனக்கக்
கிண்டிக்கொண்டிருந்தால்,
புதுதாய் வருங்காலத்திற்குப் பரிமாற பிரச்சனை முற்போட்டுவைப்பது
யாராம்?
சிந்திக்கக்கூடாதா இதையேனும் வேறு சொந்தச்சிந்தனை செத்த நேரம்?
அதை விட்டு, உன் சொந்தப்பிரச்சனை நீ பார்க்கப்போனால்,
பிறகு,
+++காலைச் சாப்பாட்டுக்குப் பின், குழாய் நீரிற் கை அலம்புவதா,
வெற்றுக் கிழிந்த கந்தற்துணி அழுக்குக் குறைந்த ஓரம்,
ஆரும் காணா நேரம், மூக்கு மூடி கண் வேறெங்கோ திருப்பித்
துடைத்துப் போவதா,
கழிவுக்கடதாசி உருளை இழுத்துக் கிழித்து, கசக்கி,
நிச்சயத்துக்கு வீதிக்குப்பைத்தொட்டி விட்டு வேறெங்கும் சுட்டி
எறிந்திட்டுப்போவதா++
என்று ஆராய்வது ஆர் என்று கேட்டால்,
இதை நான் நக்கல் என்று சொல்லவா, இல்லை
பதில் தருதல் நாகரீகம் இல்லை என்று விட்டுப்
புண்ணாக்கு மனதிருத்தி என் நோக்கில் நகரவா?
இப்போது புண்ணாக்கு போய் பல நேரம்,
நக்கலுக்கும் நாகரீகத்திற்கும் போட்டி நாட்டியம் என் தலைக்குள்
விட்டு.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home