அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

பறப்பு

புதிய வரவுகளிற் புதைந்துபோம் பழங்காலம்;
புதிது மெதுவாய்க்கட்டும் இறக்கை,
பழையது முன்னர் இட்டுக்கொண்டது போலவே.
பின்னர் பறக்கும்,
உயர,
உயர,
இன்னும் உயர,
இளைப்பினும் இறங்க நேரமற்ற உயரத்திற்கு,
ஏதோ வானம் என் சொந்தம்
என்பதுபோல்.
பூமியில் எம் விரல்கட்குச் சொந்தம் கொள்ளமுடியா நாம்,
வானத்திற் காட்டும் வண்ணம்,
வெறும் வேடிக்கை, அன்றோ தோழ?
வேறும் என்ன செய்யலாம்?
எரிக்கவும் புதைக்கவும் நிலம் இழந்த நாம்,
சிறகெடுத்து வெளிப்பறக்க மட்டுமே
பாக்யதை உடையோம்.

- '83 இலிருந்து வெளிப்பறந்தோருக்காக, 96 ல்

0பின்னூடுகை:

Post a Comment

<< Home