அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

பயம்

எனக்கு இப்போதெல்லாம்
நிறையப் பயங்கள் இருக்கின்றன.
நிற்கையில், நிமிர்கையில், நித்திரையில்,
நெடுந்தூரம் நினைவுமீட்டி நடக்கையில்
நெஞ்சம் பக்குப்பக்கு என்று கொஞ்சம் அடிச்சு வைக்க
எனக்கு இப்போதெல்லாம்
நிறையப் பயங்கள் இருக்கின்றன.

வீதி கடக்கையில் நான் காணமுன் விதி கண்டு
யாரும் வேளையற்ற வேளைக்குச் செத்துவைப்பாரோ என,
சீர்வரிசை பெண்ணுக்கு வேண்டாம் கட்டிய
சீலை உடன் கூட வாழ வந்தாற்போதும் என்று
சீர்திருத்தவாதி எவனும் சொல்லிவிட்டால் என்ன ஆகுமென,
எனக்கு இப்போதெல்லாம்
நிறையப் பயங்கள் இருக்கின்றன.

என் நாட்டில் பஞ்சமும் வஞ்சமும் செத்து மக்கள்
கொஞ்சம் நிம்மதியை மனத்தஞ்சம் பெற்றுத்தொலைத்தாலும் என்றும்
நாளைக்கு என் இப் பயங்கள் எல்லாம் சாயம் போய்,
போய் வாறோம், இனி வரோம் என்று நித்தத்திற்கும்
பறந்துபோமோ என்றும்
எனக்கு இப்போதெல்லாம்
நிறையப் பயங்கள் இருக்கின்றன.

கவிஞனாகிப் பிறந்துவிட்டு, பிறர் கஷ்டம் செத்துவைத்தால்
அ·து என் கவிக்குப் கருக்கூடாமை, பெரும் உருச்சிதைப்பாகி
நான் செயற்கைக் கருத் தேடிக் கவியாய்த் தாவியிருந்தாகு
நேரம் நிலை கூடுமோ ஞாலத்தே என்றெண்ணி, நெஞ்சமெங்கும்
எனக்கு இப்போது
நிறையவே நிழற் பயங்கள் இருக்கின்றன
நீள்காலெடுத்து நிருத்தம் செய்தாடி.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home