வண்ணத்துப்பூச்சி யாத்திரீகர்கள்
தங்கை தொலைபேசிக்குட் கீச்சிட்டுச் சொன்னாள்,
"இரு மாடு முட்டாமற்போகவியலா எம் வீட்டு முன்வீதியிலே,
குட்டைப்பாவாடை கட்டு சிறு பெட்டைப்பிள்ளை நந்தியாவட்டை
அருகினிலே,
தம் காவிப்புள்ளிச் செட்டை,
~பேரதட்டல் இருள்கேட்ட பிள்ளை விழியிமையாய்~ விரைந்து தட்டி,
முறிசுள்ளி அடைகூட்டுக்காகம், குஞ்சு முட்டை
சுற்றித்திரிந்தெம் தலை கொத்திக் கரைய,
அதுவிட்டு மிகுதி கிளையெல்லாம், புதிதாய்த் தழைக்க பூவரசு
அப்பா தரை வெட்டிப்போட,
மடக்க ஒடியா, ஆயினும் அம்மா மனமென இளகா,
அரைமுற்றல் கரும்பச்சை இலை சுற்றி,
தம்பி இல்லா இராகத்தே இலை நாகசுரம் இசைக்க,
பொய்யா மாரி அடைமழைக் கார்த்திகைக்கு,
முதல் முத்தம் கேட்டு விரி,
எழில் நெளியோடு பெண் இள மஞ்சட்செவ்விதழ்க்
கார்த்திகைப் பூ-ச்சத்திரம் ஆறக் குந்திக்
கதிர்காமக் கந்தன் வேல்காணப் பறந்திருக்கா
~ அண்ணா
இனிமேலும்,~
வெள்ளை விதவை வண்ணத்துப் பூச்சிகள்."
மாரி நாளொன்றிற் திடீர்த்தோன்றி,
காலை எழக் காதருகே கீச்சுமூட்டி, தோளிருந்து,
நுனி மூக்கிற் படபடத்து, பின்,
படையாய் நாளிரண்டுள் நிறைந்த நகர் தாம் கடக்கும்
மாயவெண்யாத்திரீகர்கள்;
முன்னிட்ட சாபம் தீர வட காட்டுக் கூட்டுத் தவமிருந்து, பின்
முருகன் வரம் பெற்று உடல்-கட்டு, தளைக் கதிவிட்டுப்
போகப்பறக்குதென்பார் முன்னரென் அம்மம்மா.
இவ்வாண்டு, முழுப்பூச்சியும் தன் பழி விட்டுப் பரமபதம் பெற்றதுவோ,
இல்லை, குரலற்ற கூட்டுப்புழுவாயே
கொடும் பகைவிலங்கால் வதைபட்டுச் செத்தனவோ,
நானறியேன்; ஆனால், தங்கை சொன்னாள் நேற்று
நேர்மைநேயம் குரல்கொட்ட,
"அண்ணா, இனிமேலும் எம்மூரிற் பறந்திருக்கா
அழகான புள்ளிக்கோலமிடு
வெண்வண்ணத்துப்பூச்சிகள் என்றெனக்குத் தோன்றுதின்று."
எரிமனம் சிறுபொறிபட்டுச் சட்டெனத் தோன்றியது;
கேட்டுவைத்தேன்,
"விட்டிற்பூச்சிகளாவது, விட்டுவைத்திருக்கப்பட்டுளதோ?"
வியப்புக் காட்டினாள் தன் தொலைமொழியில்,
"வெகுபுதுமைதான் கேட்டாய், போ.
விட்டுவைத்திருத்தலோ?! வேடிக்கைதான் உன் கேள்வி;
விளக்கிட முன்னரே வீடெல்லாம் கொட்டிக் கிடக்கிறன தம்முடல்
சுட்டுச் செத்திருக்க;
இரவெல்லாம் அவை தொட்டுத் தம் உயிர்விட்டணைத்த விளக்கு
மீளப் பற்ற வைத்தலுக்கே என் உயிர் விட்டுப்போகிறது."
பின்னர்,
எனக்குத் தெரிந்துபோனது,
வெண்பெண்வண்ணாத்துப்பூச்சிகள் என்னவாய்ப் போனதென்று;
எனக்குப் புரிந்தும்போனது,
எவ்வண்ணம் இவ்வாண்டு சிறு விட்டில்கள்
வெகுவாய் விளக்குச் சுற்றிப் பறந்து செத்துப்போகுதென்றும்.
ஆக,
மொத்தத்தில் குடம்பிகள் கூட்டுப்புழுக்கள் மட்டும்
தம் தொகை காலத்தாற் தளர்த்தி,
இயற்கை பிறழ்த்தி இறந்திருக்க்காது.
பகைவிலங்கின் கோரைப்பற்களிலே கொடுங்கூர்நகங்களிலே பற்றுண்டு,
நியாயமின்றி நிர்க்கதியாய் நசுக்குண்டு கிழியுண்டு செத்துப்போதல்
நியதியென்றால்,
மௌனிக்கூட்டுப்புழுக்களும் கூர்ப்பெடுத்து தம் பூச்சி வண்ணம்
மாற்றி,
விட்டில்களாய் செட்டை விரித்து எரி விளக்கணைத்து தாம்
செத்திருக்கும்,
தக்கன பிழைக்கும் என்ற தத்துவம் தம்முயிர் விட்டுச்
சொல்லி,
தம் வண்ணத்துப் பட்டை பிய்த்த வீட்டுமனிதர்,
கூடுடைத்த காட்டுவிலங்கு வகை வியப்பேற வெகுவாய் எரிச்சலூட்டி.
'98, மார்ச் 01, ஞாயிறு 03:12 (மத்தியமேற்கு நேரம்)

0பினà¯à®©à¯à®à¯à®à¯:
Post a Comment
<< Home