பனங்கற்றாழைச் சோகங்கள்
எழுதாமலே போன வரிகள்
இதயத்தில் இன்னமும்
இசைப்பட்டு மெருகேறும்,
வெளியே சொல்லாமல் உள்ளே
தானாய் ஊறிச் சுமையேறும்
நாட்பட்ட சோகம் போல்.
காகிதத்தில், கணினியில்,
எழுதி அனுப்பிக் கிழிப்பதினால்,
ஆவது ஏதுமில்லை,
கவிதை,
வெறும் காலம் தின்,
காகிதம் தின்
காரணம் கெட்ட காரியம் எனக் காணப்படுதல்லால்.
மனதில்,
அழித்தழித்து எழுதுவதால்,
மயக்கம் தீராமல்
தொங்கிக் தூங்கலாம்;
பிறாண்டிப் பிடுங்கலாம்.
ஆயின் என்ன?
சுமந்து பெற்ற
மனக்கருவின்
உருத்தரித்த
கவிக்குழவி,
காமாலைக் கண்களிலே
பெரும் பேயாய், பிசாசாய்,
பொழுதுபோகாமற்
பிறந்த பூதமாய்,
கல்லெடுத்தடியுண்டு,
குதறுண்டு, கொலையுண்டு,
வளருண்டு போகமுன்னே
உயிர் வரண்டு போதலிலும்.....
.......தோழ,............
........ ஒன்று சொல்வேன்,....
....
.....
...... எழுத்துருவெடுத்துச்
சொல்லமுடியாச் சோகங்களாய்
எழுந்தழிந்து மீண்டு பிறந்து கிடக்கட்டும்
சொந்த மனத்திலேயே தன் பெருமை குன்றாமல்.
பனங்கற்றாழைச் சோகங்கள்
தின்று முடிவதில்லை,
அவை தாங்கிக் கொண்டிருக்கும்
ஊமை மனம்.
பூசலார் கவி ஆலயம்,
கறை பட்டுப்போவதில்லை,
காடையர் கைக் கல்வீச்சுக்களில்,
உடைபட்டுத் துண்டாகி நொருங்கி.
சொற்கள் சோகங்களுட்
தாமுறைந்தே
மெல்லத் தூங்கட்டும்
அமைதியாய்ச்
சில நாழி.
விட்டகல்க துயிற்பஞ்சணை,
தொட்டுச் செதுக்கி
வடிவு
வெளி இட்டிடாமல்.
இதயத்தில் இன்னமும்
இசைப்பட்டு மெருகேறும்,
வெளியே சொல்லாமல் உள்ளே
தானாய் ஊறிச் சுமையேறும்
நாட்பட்ட சோகம் போல்.
காகிதத்தில், கணினியில்,
எழுதி அனுப்பிக் கிழிப்பதினால்,
ஆவது ஏதுமில்லை,
கவிதை,
வெறும் காலம் தின்,
காகிதம் தின்
காரணம் கெட்ட காரியம் எனக் காணப்படுதல்லால்.
மனதில்,
அழித்தழித்து எழுதுவதால்,
மயக்கம் தீராமல்
தொங்கிக் தூங்கலாம்;
பிறாண்டிப் பிடுங்கலாம்.
ஆயின் என்ன?
சுமந்து பெற்ற
மனக்கருவின்
உருத்தரித்த
கவிக்குழவி,
காமாலைக் கண்களிலே
பெரும் பேயாய், பிசாசாய்,
பொழுதுபோகாமற்
பிறந்த பூதமாய்,
கல்லெடுத்தடியுண்டு,
குதறுண்டு, கொலையுண்டு,
வளருண்டு போகமுன்னே
உயிர் வரண்டு போதலிலும்.....
.......தோழ,............
........ ஒன்று சொல்வேன்,....
....
.....
...... எழுத்துருவெடுத்துச்
சொல்லமுடியாச் சோகங்களாய்
எழுந்தழிந்து மீண்டு பிறந்து கிடக்கட்டும்
சொந்த மனத்திலேயே தன் பெருமை குன்றாமல்.
பனங்கற்றாழைச் சோகங்கள்
தின்று முடிவதில்லை,
அவை தாங்கிக் கொண்டிருக்கும்
ஊமை மனம்.
பூசலார் கவி ஆலயம்,
கறை பட்டுப்போவதில்லை,
காடையர் கைக் கல்வீச்சுக்களில்,
உடைபட்டுத் துண்டாகி நொருங்கி.
சொற்கள் சோகங்களுட்
தாமுறைந்தே
மெல்லத் தூங்கட்டும்
அமைதியாய்ச்
சில நாழி.
விட்டகல்க துயிற்பஞ்சணை,
தொட்டுச் செதுக்கி
வடிவு
வெளி இட்டிடாமல்.
0பினà¯à®©à¯à®à¯à®à¯:
Post a Comment
<< Home