வெளிப்படை மனிதன் ஒருவனின் வாக்கு
மற்றவரைப் போலல்லாது
மனம் திறந்த ஒற்றைச்
சில உன்னத மனிதருள்
நானும் ஒருவன் என்று
மகாப்பெருமை எனக்கு.
உள்ளொன்று வைத்துப்
புறமொன்று பேசேன்;
சொல் ஒன்று கூறிச்
செயல் ஒன்று புரியேன்.
நல்லதோ கெட்டதோ
செய்தலெல்லாம் வெளிப்படை;
சொல் உள்ளதும்
செயல் படுவதும்
விலகாது;
ஒன்றி ஒன்றில்
மற்றது உடன்பட்டுத்
தான் மறையும்.
பலர் முன்னே
பழைய பத்திரிகை சுற்றி
பச்சைப்போத்தலுள்
பட்டைச் சாராயம்
வாய் விட்டுக்
கொப்பளித்துக் கிடந்தாலும்
நான் பச்சைக்குடிகாரன்
இல்லை; எப்போதாவது
ஒரு பெக் ஜொனிவோக்கர்
விஸ்கி மட்டும் குடித்திருப்பேன்
என்பதில் மற்றவர் போலல்லாது
மனம் திறந்த மனிதன் நான்
என்பது மற்றவர்க்கு
சுத்தமாய் வெளிப்படை.
கடையில் கிழவர்,
மிச்சம் தருகையில்
ஒரு பத்து டாலர்
மேலாய் ஒட்டி வந்தது
சத்தம்போடாமல்
காற்சட்டைப்பையுள்
ஓட்டிப்போனாலும்,
கடித முத்திரைப் பணம்
ஒரு பத்துச் சதம் கூட
மிச்சமாய்த் தந்த
அஞ்சல் அலுவலகப் பெண்
மஞ்சட் கையுள் மீள,
அது கன கச்சிதமாய் வைத்து
நேர்மைத்தனம் பண்ணினேன்
என்பதில் மற்றவர் போலல்லாது
மனம் திறந்த மனிதன் நான்
என்பது மற்றவர்க்கு
சுத்தமாய் வெளிப்படை.
எட்டுக்கடிதங்கள்
போட்ட என் தாயிற்கும்
எப்போதாவது ஒரு
இரட்டை வரிநிறை
ஒற்றைக்கடிதமோ,
உன்னத ஒரு நிமிடச்
சத்தக் கூப்பிடலோ
மனம் பற்றிப் புரிகிறேன்
என்பதில் மற்றவர் போலல்லாது
மனம் திறந்த மனிதன் நான்
என்பது மற்றவர்க்கு
சுத்தமாய் வெளிப்படை.
இப்படி எத்தனையோ
என் மனச்சுத்தம் பற்றி
எண்ணிக் கிடக்கலாம்;
ஆனால் எதற்கு?
இங்கேயே நிறுத்துவேன்.
ஏ
னெ
ன்
றா
ல்,
சும்மா எத்துணை
உலகத்து எத்தர்கள் போலன்றி,
நல்ல மன வெள்ளை உத்தமன் நானென
எப்போதும் எடுத்து
எழுதிச் சொல்லிப் பெருமைச்
சத்தம் இடுபவன் நானில்லை
என்பதில் மற்றவர் போலல்லாது
மனம் திறந்த மனிதன் நான்
என்பது மற்றவர்க்கு
சுத்தமாய் வெளிப்படை.
- '98 ஆனி 29, திங்கள் 19:54 CST
மனம் திறந்த ஒற்றைச்
சில உன்னத மனிதருள்
நானும் ஒருவன் என்று
மகாப்பெருமை எனக்கு.
உள்ளொன்று வைத்துப்
புறமொன்று பேசேன்;
சொல் ஒன்று கூறிச்
செயல் ஒன்று புரியேன்.
நல்லதோ கெட்டதோ
செய்தலெல்லாம் வெளிப்படை;
சொல் உள்ளதும்
செயல் படுவதும்
விலகாது;
ஒன்றி ஒன்றில்
மற்றது உடன்பட்டுத்
தான் மறையும்.
பலர் முன்னே
பழைய பத்திரிகை சுற்றி
பச்சைப்போத்தலுள்
பட்டைச் சாராயம்
வாய் விட்டுக்
கொப்பளித்துக் கிடந்தாலும்
நான் பச்சைக்குடிகாரன்
இல்லை; எப்போதாவது
ஒரு பெக் ஜொனிவோக்கர்
விஸ்கி மட்டும் குடித்திருப்பேன்
என்பதில் மற்றவர் போலல்லாது
மனம் திறந்த மனிதன் நான்
என்பது மற்றவர்க்கு
சுத்தமாய் வெளிப்படை.
கடையில் கிழவர்,
மிச்சம் தருகையில்
ஒரு பத்து டாலர்
மேலாய் ஒட்டி வந்தது
சத்தம்போடாமல்
காற்சட்டைப்பையுள்
ஓட்டிப்போனாலும்,
கடித முத்திரைப் பணம்
ஒரு பத்துச் சதம் கூட
மிச்சமாய்த் தந்த
அஞ்சல் அலுவலகப் பெண்
மஞ்சட் கையுள் மீள,
அது கன கச்சிதமாய் வைத்து
நேர்மைத்தனம் பண்ணினேன்
என்பதில் மற்றவர் போலல்லாது
மனம் திறந்த மனிதன் நான்
என்பது மற்றவர்க்கு
சுத்தமாய் வெளிப்படை.
எட்டுக்கடிதங்கள்
போட்ட என் தாயிற்கும்
எப்போதாவது ஒரு
இரட்டை வரிநிறை
ஒற்றைக்கடிதமோ,
உன்னத ஒரு நிமிடச்
சத்தக் கூப்பிடலோ
மனம் பற்றிப் புரிகிறேன்
என்பதில் மற்றவர் போலல்லாது
மனம் திறந்த மனிதன் நான்
என்பது மற்றவர்க்கு
சுத்தமாய் வெளிப்படை.
இப்படி எத்தனையோ
என் மனச்சுத்தம் பற்றி
எண்ணிக் கிடக்கலாம்;
ஆனால் எதற்கு?
இங்கேயே நிறுத்துவேன்.
ஏ
னெ
ன்
றா
ல்,
சும்மா எத்துணை
உலகத்து எத்தர்கள் போலன்றி,
நல்ல மன வெள்ளை உத்தமன் நானென
எப்போதும் எடுத்து
எழுதிச் சொல்லிப் பெருமைச்
சத்தம் இடுபவன் நானில்லை
என்பதில் மற்றவர் போலல்லாது
மனம் திறந்த மனிதன் நான்
என்பது மற்றவர்க்கு
சுத்தமாய் வெளிப்படை.
- '98 ஆனி 29, திங்கள் 19:54 CST
0பினà¯à®©à¯à®à¯à®à¯:
Post a Comment
<< Home