அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

புள்ளிகள்

புள்ளிகள் எனக்கு ஒரு புரியாப் பெரும் விந்தை;
காலா, அரையா, முக்காலா, முற்றேமுற்றியதா
என்றேதும் பேதம் இல்லை இவ்விசித்திரத்திற்கு.
காற்புள்ளி போகி என்றது;
குழந்தைக்கு உடைத்து உடைத்துச் செரிக்க ஊட்டிய உணவு வகை
சுருக்க முற்றுப்புள்ளியோ ஞானி என்றது.
இடையில் அலைந்திருப்பர்
கறுப்பும் வெளுப்பும் அற்ற சாம்பல் நிற மனமேனி மேதினி
மக்கள்.
விளங்கச் சொல்வதா புள்ளிகளின் விவரணக் கோலம், அல்லது
வியப்பாய் சுருங்கச் சொல்லி நீயே சோதித்தறி உட்பொதி கருத்து
என்று விட்டிருப்பதா?
புள்ளிகள் புரிய கோலம் இடும் கை புரிய வேண்டாமோ?
கோலம் கீறு கை நளினம் நகர்வு அறிய
அது கொண்டியக்கும் மன ஏற்ற இறக்கங்கள் சுழியோடத்தோன்றும்.
மூச்சுப்போகாமல் காலம் கொல்லும் இம்மூச்சடக்கு யோகம் புரிபடுவகை
வரை
புள்ளிகள் அவை புரி கைகள் எல்லாமே எனக்கு ஒரு புரியாத
பெரும் விந்தை.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home