அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

என் நாட்டுப்பூக்கள்

என் நாட்டுப்பூக்கள் சிவப்பு நிறம் தாமாய்க் கொண்டனவா, இல்லை,
வேர்கொள் மண்விழுந்த மனிதர் குருதி குடித்துத் தந்தனவா?
எனக்கேனோ ஏதோ கிட்டிய ஒரு நாளுக்கு, அவை
இரத்தம் சொட்டச்சொட்டவே மொட்டுவிரிக்கும் என்று மனம் பட்டிருக்கும்.
குடிக்கத் தண்ணீர் குட்டையள்ள,
கொட்டக்கொட்ட குருதி வரும் என் நாட்டில்
இ·து ஒன்றும் நிகழக் கஷ்டப்படு செயலல்ல.
குருதிச்சுவை அடிமைப்படு நந்தவனமெல்லாம்
கடந்துபோம் மனிதர் கட்டியிழுத்து இரத்தம் உறுஞ்சி,
உடற்சக்கை கூட உரமெனத் தம் வேர்தாங்கு
தரை புதைக்கவும் கூடுமென்கிறார் சிலர்.
எனக்கேனோ அத்தனை அரக்கத்தனமெல்லாம்
எனக்காகி இருக்கும் என்று பட்டிராது.
அதன் முதலே அன்பு கொண்டு,
சிரஞ்சீவி அரச சிரம் சீவியில் ஆரோ ஒருவர்,
சிக்கனமாய் என் சிரம் சீவி
சிர(ம)தானம் செய்துவைப்பார் என்று முழு நம்பிக்கை.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home