சிலுக்கு ஸ்மிதா எனப்படும் விஜயலக்ஷ்மிக்கு,
நேற்றுக்காலை கணணியூடே செய்தி,
நீ தூங்கியே நிரந்திரமாய்த் தூங்கினாய் என்று.
சகோதரி,
இ·து இரங்கற்பா இல்லை- எனினும்
ஓர் இருப்பாயில்லை என்மனம்.
இதுகாலமும்,
உன்னைப் பற்றி அபிப்பிராயம்
ஏதும் அற்றவன் நான்.
ஆனால், என்றும்
திரைப்பெண்கள் வாழ்வு
திரைபின் எப்படி என்றோர் ஆய்வு.
நேற்று,
பட்டென்ற படாபட்,
சோகம் தந்து ஷோபா,
இன்று,
மின்னலாய்
மூவைந்து ஆண்டு திரை(ப்) பட்டென்று,
மின்னி, மங்கிப்போன மின்மினியாய் நீ,
நாளை......
.......யார்?
திரைகேட்கையில் உன் துகிலுரித்த துச்சாதனர்கள்,
நீ துகில் தூக்கி
உன் துக்கம் தூக்கிடுகையில்,
என்னவானார்?
துண்டு அப்பிள் ஆயிரம் ரூபா
நீ கடித்தால் ஒரு காலம்;
இன்றோ, அக்காலம் குதறித்
துடித்துத் துண்டுகளாய் நீ.
கோடம்பாக்கம், உண்மையில்
ஒரு கீழ்ப்பாக்கம், சகோதரி.
அதன் ஆதாரச்சமன்பாடு, வெறும்
(பெரும்) பணம் + (பருவப்) பெண் = (திரைப்) பாசம்.
எதுவெனினும்,
நீ போய் மட்டும் நிற்காது
திரை வண்டிச்சக்கரம்;
அதில், போதையூற்றிக் கொடுக்கவரும்
வேறொரு போதைவிழிப்புதுக்கை.
இனி,
உன் இறுதி ஊர்வலத்தையே
ஏதாவது பட இறுதியில் ஊர்த்துவார்
கிழிந்தாலும் பட்டுப்பட்டென்றே பணமெண்ணி.
அங்கேனும்,
உடல்மூடி உடையுடன்
உன்னை உறங்கவிடவேண்டி,
உள்ளன்புடன்,
நீ முகமறியாவோர்
உடன்பிறவாச்சகோதரன்.
- '95 ('96??), நடிகை 'சிலுக்' ஸ்மிதாவின் மரணச்செய்திகேட்டபோது
நீ தூங்கியே நிரந்திரமாய்த் தூங்கினாய் என்று.
சகோதரி,
இ·து இரங்கற்பா இல்லை- எனினும்
ஓர் இருப்பாயில்லை என்மனம்.
இதுகாலமும்,
உன்னைப் பற்றி அபிப்பிராயம்
ஏதும் அற்றவன் நான்.
ஆனால், என்றும்
திரைப்பெண்கள் வாழ்வு
திரைபின் எப்படி என்றோர் ஆய்வு.
நேற்று,
பட்டென்ற படாபட்,
சோகம் தந்து ஷோபா,
இன்று,
மின்னலாய்
மூவைந்து ஆண்டு திரை(ப்) பட்டென்று,
மின்னி, மங்கிப்போன மின்மினியாய் நீ,
நாளை......
.......யார்?
திரைகேட்கையில் உன் துகிலுரித்த துச்சாதனர்கள்,
நீ துகில் தூக்கி
உன் துக்கம் தூக்கிடுகையில்,
என்னவானார்?
துண்டு அப்பிள் ஆயிரம் ரூபா
நீ கடித்தால் ஒரு காலம்;
இன்றோ, அக்காலம் குதறித்
துடித்துத் துண்டுகளாய் நீ.
கோடம்பாக்கம், உண்மையில்
ஒரு கீழ்ப்பாக்கம், சகோதரி.
அதன் ஆதாரச்சமன்பாடு, வெறும்
(பெரும்) பணம் + (பருவப்) பெண் = (திரைப்) பாசம்.
எதுவெனினும்,
நீ போய் மட்டும் நிற்காது
திரை வண்டிச்சக்கரம்;
அதில், போதையூற்றிக் கொடுக்கவரும்
வேறொரு போதைவிழிப்புதுக்கை.
இனி,
உன் இறுதி ஊர்வலத்தையே
ஏதாவது பட இறுதியில் ஊர்த்துவார்
கிழிந்தாலும் பட்டுப்பட்டென்றே பணமெண்ணி.
அங்கேனும்,
உடல்மூடி உடையுடன்
உன்னை உறங்கவிடவேண்டி,
உள்ளன்புடன்,
நீ முகமறியாவோர்
உடன்பிறவாச்சகோதரன்.
- '95 ('96??), நடிகை 'சிலுக்' ஸ்மிதாவின் மரணச்செய்திகேட்டபோது
0பினà¯à®©à¯à®à¯à®à¯:
Post a Comment
<< Home